திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் 15 பேருக்கு கொரோனா உறுதி| 15 priests in Andhra's Tirupati test positive for Covid-19 | Dinamalar

திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் 15 பேருக்கு கொரோனா உறுதி

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (5)
Share

இந்த செய்தியை கேட்க

திருமலை: திருமலை திருப்பதி கோவிலில் 15 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.



latest tamil news



கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முதற்கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கோவில் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டன.

இதனிடையே ஆந்திரமாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி கோவில் கடந்த ஜூன் மாதம் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. இதனிடையே கோவில் அர்ச்சகர்களில் 50 பேரில் 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 25 பேரின் பரிசோதனை முடிவுகள் வர உள்ளன.

இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி அனில் குமார்சிங்கூறியதாவது: கடந்த 10 ம் தேதி வரையில் திருமலையில் 1,865 ஊழியர்களுக்கும், அலிபிரியில் 1,704 ஊழியர்களுக்கும் பக்தர்கள் 631 பேருக்கும் கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் யாருக்கும் உடல் நல பிரச்னைகள் இல்லை. அவர்களை தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்து வருகிறோம் என கூறினார்.


latest tamil news



சித்தூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசோதனையில் முடிவுகள் அனைத்தும் எதிர்மறையாக வந்துள்ளன.என
கூறினார்.

இதனிடையே கோவில் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோவில் தரிசனத்தை தற்காலிகமாக நிறுத்தப்ட வேண்டும் என நிர்வாக அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X