பீமா கோரேகான் கலவர வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு கொரோனா | Dinamalar

பீமா கோரேகான் கலவர வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு கொரோனா

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (3)
Share
Bhima Koregaon violence accused பீமா கோரேகான் கலவர வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு கொரோனா  activist Varavara Rao tests positive for coronavirus

கோல்ஹாப்பூர்: பீமா கோரேகான் கலவர வழக்கில் முக்கிய குற்றவாளியான வர வர ராவ்வுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகே பீமா கோரேகான் என்ற இடத்தில் 2017 டிச., 31ம் தேதி இரு தரப்பினரிடையே கலவரம் ஏற்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தியதில், கலவரத்திற்கு காரணமான எல்கர் பரிஷத் மாநாட்டில் பேசியது, கலவரத்திற்கு நிதியுதவி செய்தது என வர வர ராவ், வெர்னான் கன்சால்வெஸ், அருண் பெரைரா, சுதா பரத்வாஜ், கவுதம் ரவாலகா உள்ளிட்ட 6 பேரை புனே போலீசார் கைது செய்தனர்.


latest tamil news




இவர்கள் நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவு(என்.ஐ.ஏ.,) விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான 80 வயது வரவர ராவுக்கு கடந்த ஞாயிறன்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடல் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது இதையடுத்து மும்பை ஜெ.ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக செயின்ட் ஜியார்ஜ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X