இந்தியாவால் உலகிற்கே கொரோனா தடுப்பூசி தயாரித்து வழங்க முடியும்: பில் கேட்ஸ்| India is capable of producing Covid-19 vaccine for the entire world: Bill Gates | Dinamalar

இந்தியாவால் உலகிற்கே கொரோனா தடுப்பூசி தயாரித்து வழங்க முடியும்: பில் கேட்ஸ்

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (4)
Share

வாஷிங்டன்: இந்தியாவால் உலகிற்கே கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வழங்க முடியும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.latest tamil newsஇதுகுறித்து தனியார் டிவி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவில் பல முக்கியமான கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மக்கள் தொகை, கொரோனா பரவலை கட்டுப்படுத்த மிகப்பெரும் சவாலாக உள்ளது. கொரோனா பரவலின் முதல்கட்டத்தில் தான் இந்தியா தற்போது வரை உள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மக்கள் தாமாக முன்வந்து பங்களித்து வருகின்றனர்.


latest tamil newsஇந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பு துறை அதிக பலம் வாய்ந்தது. உலகிலேயே அதிகமான தடுப்பூசி தயாரிப்பு இந்தியாவில்தான் நடக்கிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிப்பு மற்றும் மருந்து தயாரிப்புக்கான சிஇபிஐ குழுமத்தில் இந்தியாவும் ஒரு உறுப்பினர். இந்தியாவால், இந்தியாவுக்கு மட்டுமன்றி, உலகிற்கே கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வழங்க முடியும். அங்கு சீரம் இன்ஸ்டிடியூட், பயோ இ, பாரத் பயோடெக் உள்ளிட்ட நிறைய நிறுவனங்கள் உள்ளன.

இறப்பு விகிதத்தை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். இந்திய அரசுடன் இணைந்து எனது பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம், உ.பி., பீகார் மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரப் பணியாளர்களுக்கும் ஆன்லைன் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X