பொது செய்தி

தமிழ்நாடு

தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்த்த பிரதமருக்கு நன்றி: இபிஎஸ்

Updated : ஜூலை 17, 2020 | Added : ஜூலை 17, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement

சென்னை: திருக்குறள் அதி அற்புதமான நூல் என பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டதற்கு, முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.



latest tamil news



திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயிரிய சிந்தனைகள், உன்னத குறிக்கோள்களை, ஊக்கம் தரும் கருத்துகளை உள்ளடக்கிய பொக்கிஷம் என பிரதமர் மோடி, டுவிட்டரில், தமிழில் பதிவிட்டுள்ளார். அதே கருத்தை ஆங்கிலத்திலும் தெரிவித்துள்ளார்.


latest tamil news



இதற்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: தமிழுக்கும், தமிழருக்கும் பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார். இனம், மொழி, நாடு போன்ற எல்லைகளைக் கடந்து அனைத்து தரப்பு மக்களின் வாழ்வினை நெறிப்படுத்தும் உயரிய நூல் திருக்குறள். இந்தியா முழுவதுமுள்ள இளைஞர்கள் திருக்குறளை படித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
18-ஜூலை-202012:10:53 IST Report Abuse
Rafi போகின்ற போக்கில் சொல்வதானால் ஏதும் ஆகிவிடப்போவதில்லை. ஐ நா வில் தமிழுக்கான இருக்கை அமைக்க தன்னார்வ தமிழறிஞர்களின் விடா முயற்சியினால் கிடைக்கப்பட்டதற்கு மத்திய அரசு ஏதாவது உதவினார்களா? அல்லது அதை எதிர்க்க மறைமுகமாக உதவினார்களா என்று சிந்தித்தால் விடை எதிராக இருந்தது புலப்படும். உள் நாட்டிலேயே தமிழ் வளர்ச்சிக்காக அவர்கள் ஒதுக்கிய தொகையையும், சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கிய தொகையோடு ஒப்பிட்டு பார்த்தால் வரும் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் இருப்பது புலப்படும். விளம்பரமே முன்னிலைப்படுத்தி ஆட்சி செய்கின்றார்கள். பலன் கை தட்டி கொரோனாவை ஒலித்தது தான் நினைவில் வந்து செல்கின்றது. முதல்வர் அரசியல் செய்ய வேண்டும் வாழ்த்த இது ஒரு வாய்ப்பாக எடுத்து கொண்டுள்ளார்.
Rate this:
Cancel
17-ஜூலை-202017:26:18 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) நல்ல பிரதமர் நல்ல உலக பொதுமறையான திருக்குறளை அனைவரையும் படித்து அதன்படி நடக்க சொல்கிறார் , இதிலும் அரசியல் பண்ணுபவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் ரவுடிகளையும் அடிமைகளையும் மக்கள் நிராகரிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
17-ஜூலை-202012:54:00 IST Report Abuse
Oru Indiyan தமிழ் தலைவர்கள் ஏன் மூடிக்கொண்டு இருக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X