அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாணவர் எதிர்காலத்தை பாழாக்காதீர்! ஸ்டாலினுக்கு பா.ஜ., வேண்டுகோள்

Updated : ஜூலை 17, 2020 | Added : ஜூலை 17, 2020 | கருத்துகள் (82)
Share
Advertisement
சென்னை : 'பாழும் அரசியல் உள்நோக்கத்தினால், மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை பாழாக்கும் நடவடிக்கைகளை, நிறுத்திக் கொள்ளுங்கள்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, பா.ஜ., செய்தி தொடர்பாளர், நாராயணன் திருப்பதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:'ராணுவ உடையில், திருக்குறளை சுட்டிக்காட்டும் பிரதமர், ராணுவத்தில் தமிழர் பங்கு என்ற, சி.பி.எஸ்.இ., பாடத்தை நீக்குகிறார். தமிழர்
DMK, Stalin, BJP, MK Stalin, திமுக, பாஜ, ஸ்டாலின்

சென்னை : 'பாழும் அரசியல் உள்நோக்கத்தினால், மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை பாழாக்கும் நடவடிக்கைகளை, நிறுத்திக் கொள்ளுங்கள்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, பா.ஜ., செய்தி தொடர்பாளர், நாராயணன் திருப்பதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:'ராணுவ உடையில், திருக்குறளை சுட்டிக்காட்டும் பிரதமர், ராணுவத்தில் தமிழர் பங்கு என்ற, சி.பி.எஸ்.இ., பாடத்தை நீக்குகிறார். தமிழர் நேசிக்கும் சிலப்பதிகாரம், ஈ.வெ.ரா., சிந்தனைகள், ம.பொ.சி.,யின் எல்லை போராட்டம் ஆகியவற்றை, மீண்டும் இணைக்க மறுத்தால், இம்மண்ணில், நோட்டாவை தாண்டுவதை கூட, பா.ஜ., மறந்து விடலாம்' என, ஸ்டாலின் கூறியுள்ளார்.

கொரோனா பேரிடர் காரணமாக, மாணவர்களின் சுமையை குறைப்பதற்காக, சி.பி.எஸ்.இ., கல்வி வாரியம், அனைத்து பாடங்களிலும், 30 சதவீதத்தை குறைத்துள்ளது. மொத்தம் உள்ள, ஒன்பது பிரிவுகளில், மூன்று பிரிவுகளை நீக்கியுள்ளது. ஸ்டாலின் குறிப்பிட்ட தலைப்புகள் அல்லாது, ராமானுஜர், நாச்சியார், ஆண்டாள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளும் இடம் பெற்றிருந்தன. அதை, அவர் மறந்து விட்டார். இந்த பாடங்களுக்கு பதில், வேறு எந்த பாடங்களை நீக்க வேண்டும் என்கிறார், ஸ்டாலின்.


latest tamil news



ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்தின் முதல் பிரிவில், 'திராவிட மொழி குடும்பம், கல்வி மற்றும் கல்வியில் சிறந்த பெண்கள்' என்ற தலைப்பில் பாடங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை நீக்க வேண்டும் என்கிறாரா ஸ்டாலின்? மூன்றாம் பிரிவில், பண்பாடு என்ற தலைப்பில், 'ஏறு தழுவுதல்' குறித்த பகுதி இடம்பெற்றுள்ளது. இதை வேண்டாம் என்கிறாரா ஸ்டாலின்?

மாநில பாடத்திட்டத்திற்கு, 'ஆன்லைன்' வகுப்பே கூடாது எனக்கூறும் தி.மு.க., தான், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 30 சதவீதம் குறைப்பதை கண்டிக்கிறது. அதன் இரட்டை நிலைபாட்டை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க.,வும் மற்ற எதிர்க்கட்சியினரும், கல்வியில் அரசியல் செய்வது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாழும் அரசியல் உள் நோக்கத்தினால், மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை பாழாக்கும் நடவடிக்கைகளை, நிறுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthikeyan - Vellore,இந்தியா
19-ஜூலை-202013:03:23 IST Report Abuse
Karthikeyan Sorry, எனக்கு தெரிந்த அரசியல் இதுதான் - சுடலை
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
18-ஜூலை-202020:04:59 IST Report Abuse
bal படிக்காத தற்குறியெல்லாம் மாணவர்கள் பற்றி பேச அருகதையில்லை. இந்த திமுக குடும்பம் திருட்டு கொள்ளை கொலை பண்ணும் குடும்பம்...இன்னும் தமிழ் மக்கள் இவரைகளையே தேர்ந்தெடுக்கின்றனர்.
Rate this:
Cancel
G.Kirubakaran - Doha,கத்தார்
18-ஜூலை-202017:22:57 IST Report Abuse
G.Kirubakaran சார், சுடலை என்ன அவராகவே படித்து பார்த்தா ,கேள்வி கேட்டுள்ளார் ?எப்போதும் போல துண்டு சீட்டில் உள்ளதை பேசி உள்ளார். சீரியஸ் அகா எடுத்து கொள்ள வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X