கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை ஊழியர்களிடமே நடத்திய சீன நிறுவனம்

Updated : ஜூலை 17, 2020 | Added : ஜூலை 17, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Sinopharm, Corona Vaccine, China, coronavirus, UAE news, சீனா, சினோபார்ம், கொரோனா, வைரஸ், தடுப்ப மருந்து, ஊழியர்கள், சோதனை

பீஜிங்: கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில், உலக நாடுகளிடையே போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், சீன நிறுவனம் ஒன்று, தடுப்பு மருந்தை, தன் ஊழியர்களிடமே சோதனை நடத்தியுள்ளது.

சீனாவில் முதன்முதலில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனாவுக்கு, இதுவரையிலும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில், இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உட்பட பல நாடுகள், தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், அதை மனிதர்களிடம் கொடுத்து, பல்வேறு கட்டங்களில் சோதனை நடத்த வேண்டும். அதன் முடிவுகளை வைத்து தான், அது கொரோனாவுக்கான தடுப்பு மருந்து என்பதை உறுதி செய்ய முடியும்.


latest tamil newsமனிதர்களிடம் சோதனை நடத்துவதற்கு, சர்வதேச அளவில் சில விதிமுறைகள் உள்ளன. இதை பின்பற்றி, அரசின் ஒப்புதல் பெற்று, சோதனை நடத்தப்பட வேண்டும். கொரோனாவுக்காக, 24 தடுப்பு மருந்துகள், பல்வேறு கட்ட சோதனைகளில் உள்ளன. இதில், எட்டு மருந்துகள், சீன நிறுவனங்கள் தயாரித்தவை. சீன அரசு நிறுவனமான, 'சினோ பார்ம்' கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில், இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக, ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சினோ பார்ம் நிறுவனம், தன் இணையதளத்தில் கூறியிருப்பதாவது:


latest tamil newsகொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள, எங்கள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உட்பட, ஊழியர்கள் பலரும், தாங்களாக விருப்பம் தெரிவித்தனர். அரசிடம் ஒப்புதல் பெறுவதற்கு முன்பே, சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள தயாரான இந்த தியாகிகளிடம் தான், கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு, சினோ பார்ம் நிறுவனம் தெரிவித்துள்ளது. சோதனை மேற்கொள்ளப்பட்ட ஊழியர்களின் புகைப்படங்களையும், அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
17-ஜூலை-202016:45:52 IST Report Abuse
ocean இவன்கள் சொல்வதை யார் நம்புவது.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
17-ஜூலை-202012:22:25 IST Report Abuse
S. Narayanan வேறு யாரும் ஒத்து கொள்ள மாட்டார்கள்.
Rate this:
Cancel
aboosiddiq82 - chennai,இந்தியா
17-ஜூலை-202012:04:51 IST Report Abuse
aboosiddiq82 No one will trust China now. Better all countries should isolate china. India should initiate to remove China from UNSC as a permanent member and also no VETO power. India should be in UNSC as a permanent member. Need to remove VETO power from all the 5 countries. There shouldn't be any VETO power in UNSC.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X