ஒலியைவிட வேகமாகச் செல்லும் அமெரிக்க ஹைப்பர்சானிக் ஏவுகணை; டிரம்ப் பெருமிதம்

Updated : ஜூலை 17, 2020 | Added : ஜூலை 17, 2020 | கருத்துகள் (5) | |
Advertisement
வாஷிங்டன்:அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகன். இதில் உலகில் தலைசிறந்த ஏவுகணைகள் உள்ளன. ஒலியின் வேகத்தைக் காட்டிலும் (மணிக்கு 1,225 கி.மீ) 17 மடங்கு வேகமாக பாய்ந்து செல்லும் ஹைபர்சானிக் ஏவுகணை தயாரிப்பில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். தற்போது இதனை சூப்பர் டூப்பர் ஏவுகணை எனக்கூறி பெருமிதம் அடைந்துள்ளார்.இந்த அதிநவீன
ஒலி, அமெரிக்கா, ஹைப்பர்சானிக் ஏவுகணை, டிரம்ப் பெருமிதம் ,

வாஷிங்டன்:அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகன். இதில் உலகில் தலைசிறந்த ஏவுகணைகள் உள்ளன. ஒலியின் வேகத்தைக் காட்டிலும் (மணிக்கு 1,225 கி.மீ) 17 மடங்கு வேகமாக பாய்ந்து செல்லும் ஹைபர்சானிக் ஏவுகணை தயாரிப்பில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். தற்போது இதனை சூப்பர் டூப்பர் ஏவுகணை எனக்கூறி பெருமிதம் அடைந்துள்ளார்.

இந்த அதிநவீன ஹைபர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு நன்றாக இயங்குகிறது என்பதை பென்டகன் நிர்வாகிகளும் அறிவித்தனர். ஆனால் ஏவுகணை தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை காட்டிலும் ரஷ்யாவும் சீனாவும் முன்னோடிகளாக விளங்குகின்றன. தற்போது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள ஹைபர்சானிக் ஏவுகணையைபோல சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே தயாரித்துவிட்டன.

இவற்றுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அதிநவீன ஏவுகணையை 2023 ஆம் ஆண்டுக்குள் தயாரிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்திருந்தார்.


latest tamil news
ஹைபர்சானிக் ஏவுகணைகள் மணிக்கு 3,800 மைல் வேகத்தில் பயணிக்கும். எந்த உயரத்தில் இருந்து வேண்டுமானாலும் இந்த ஏவுகணையை ஏவ முடியும்.பொதுவாக பாலிஸ்டிக் மிசைல் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் பாதையை ஏவுகணை தடுப்பு கருவியால் கணிக்க இயலும். ஆனால் ஹைபர்சானிக் ஏவுகணையின் பாதையை இந்த இயந்திரங்கள் கணிப்பது மிகக் கடினம். இந்த ஹைபர்சானிக் ஏவுகணையை ஒரு நாட்டின்மீது ஏவிவிட்டால் அந்நாட்டுக்கு அழிவு உறுதி. 2023 ஆம் ஆண்டுக்குள் இந்த ஹைபர்சானிக் ஏவுகணை அதன் தளத்தில் நிலைநிறுத்தப்படும் என கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
17-ஜூலை-202020:49:28 IST Report Abuse
கதிரழகன், SSLC விளங்க மாட்டணுது. ஐசாக் சார் அப்போலோ விண்கலம் பாடத்துல "ஒலியை விட வேகமா போனா சூப்பர் சோனிக்" ன்னு சொல்லி குடுத்தாரு. இப்ப ஹைப்பர் சானிக் ன்னா ஒளியை விட வேகமா போகும்னு நெனச்சா இல்ல இதுவும் ஒலியை விட வேகம் ன்னு அர்த்தம் சொல்லுறங்க . ஏண்டா உருப்படியா ஒரு வார்த்தை வெக்க மாட்டீங்களா, மாத்திக்கிட்டே இருக்கீங்க ?
Rate this:
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
17-ஜூலை-202018:36:17 IST Report Abuse
mrsethuraman  அதை விட வேகமா கரோனா போயிட்டிருக்கு. அதை முதலில் கவனியுங்க
Rate this:
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இந்தியா
17-ஜூலை-202016:03:58 IST Report Abuse
மூல பத்திரம் நம்மிடம் உள்ள ப்ரம்மஹாஸ் ஹைப்பர் சோனிக் தானே. ஏன் இந்தியா பெயர் குறிப்பிடப்படவில்லை.
Rate this:
Dynamo - Den Haag,நெதர்லாந்து
17-ஜூலை-202017:48:13 IST Report Abuse
DynamoBrahMos is super supersonic cruise missile. It is not a "hypersonic" missile......
Rate this:
தமிழன் - சென்னை,இந்தியா
17-ஜூலை-202017:51:29 IST Report Abuse
தமிழன்பிரம்மாஸ் ஹைப்பர்சானிக் இல்லை. சூப்பர்சானிக். ரஷ்யா ஏற்கனவே ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை சோதனை செய்து விட்டது. நமது பிரம்மாஸ் ஏரோ-ஸ்பேஸ் கம்பெனியிடம் புதிய ஹைப்பர்சானிக் ஏவுகணை தயாரிப்பதற்கான வடிவமைப்பு புளூபிரிண்ட் தயாராக இருப்பதாக சிவதாணுப்பிள்ளை சொல்லி இருந்தார். இது ரஷ்யாவிடம் இருந்து கிடைத்தாக இருக்கலாம். முதல் ஏவுகணை சோதனைக்கான பணிகளை இந்நேரம் ஆரம்பித்திருப்பர். விரைவில் எதிர்பார்க்கலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X