பொது செய்தி

இந்தியா

எச்.சி.எல்., நிறுவனத்தின் தலைவராக ரோஷ்னி நாடார் நியமனம்

Updated : ஜூலை 17, 2020 | Added : ஜூலை 17, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
RoshniNadarMalhotra, WealthiestWoman, HCL, NewChief, எச்சிஎல், ரோஷ்னி நாடார், தலைவர், நியமனம்

புதுடில்லி: இந்தியாவின் மூன்றாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல்., குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ஷிவ் நாடார் பதவி விலகியதால், அவரது மகள் ரோஷ்னி நாடார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடாரால் தொடங்கப்பட்ட இந்துஸ்தான் கம்யூட்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் எச்.சி.எல்., என அறியப்படுகிறது. நொய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனத்தின் தலைவராக ஷிவ் நாடார் பதவி வகித்து வந்தார். தற்போது அவர் பதவி விலகியுள்ளதால், 38 வயதாகும் அவர் மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா தலைவர் பொறுப்புக்கு வந்துள்ளார்.


latest tamil news


டில்லியில் பிறந்து வளர்ந்த ரோஷ்னி நாடார் இந்தியாவின் பணக்கார பெண்மணிகளில் ஒருவர். 2019-ம் ஆண்டில் ஐ.ஐ.எப்.எல்., வெல்த் ஹூருன் தகவல் படி அவரது சொத்து மதிப்பு ரூ.31,400 கோடி ஆகும். 2017 முதல் 2019 வரை போர்ப்ஸ் வெளியிட்ட "உலகின் 100 சக்திவாய்ந்த பெண்கள்" பட்டியலில் ரோஷ்னி இடம்பெற்றுள்ளார். பள்ளிப்படிப்பை டில்லியிலும், எம்.பி.ஏ படிப்பை அமெரிக்காவின் இலினாய்ஸில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலை.,யிலும் முடித்துள்ளார்.


latest tamil news


2013-ல் எச்.சி.எல்., குழுவில் கூடுதல் இயக்குநராக சேர்க்கப்பட்டார். பின்னர் எச்.சி.எல்., நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், சி.இ.ஓ., எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் வாரியத்தின் துணைத் தலைவர், ஷிவ் நாடார் அறக்கட்டளையின் தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும் வனவிலங்குகள் மற்றும் இயற்கை ஆர்வலரான இவர், தி ஹபிடேட்ஸ் அறக்கட்டளை என்ற ஒன்றை 2018-ல் உருவாக்கி நாட்டின் இயற்கை வாழ்விடங்களையும், பூர்வீக உயிரினங்களையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
19-ஜூலை-202021:02:11 IST Report Abuse
Rangiem N Annamalai அவர் அப்பாவை போல சாதனைகள் செய்யட்டும் .
Rate this:
Cancel
VELAN S - Chennai,இந்தியா
19-ஜூலை-202020:27:43 IST Report Abuse
VELAN S எச்.சி.எல்., குழுவில் சேரும்போதே ரோஷ்ணி கூடுதல் இயக்குநராக ஆக்க்கப்பட்டார். அப்புறம் ஒரே தலைவி போஸ்டுதான் . ஆக , தொண்டர் போஸ்டு எல்லாம் நமக்கு , தலைவி போஸ்ட்டெல்லாம் அவுங்களுக்கு. அவிங்க தலையெழுத்து அப்படி இருக்கு , நம்ம தலையெழுத்து இப்படி இருக்கு . இதை பற்றி கடவுளிடம் புகார் கொடுப்போம் . வேற என்ன செய்ய .
Rate this:
jagan - Chennai,இந்தியா
23-ஜூலை-202021:44:31 IST Report Abuse
jaganஅப்ப கூட உழைத்து பார்ப்போமே என்று வராதே...நீர் நிச்சயம் குண்டுச்சட்டி தமிழர் தான்...
Rate this:
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
19-ஜூலை-202018:23:25 IST Report Abuse
TamilArasan இந்தியாவின் பணக்கார பெண்மணி என்ற பெருமைக்கு சொந்தக்காரி... ஊரை அடித்து உலையில் போட்டு வயிறு வளர்த்து பெரும் செல்வந்தர்களாக இருக்கும் அரசியல் வியாதிகள் போல் இல்லாமல் தன் உழைப்பு மற்றும் அறிவை மூலதனமாக கொண்டு வாழ்வில் முன்னேறிய ஷிவ்நாடாரின் மகள் அவரை போன்று வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X