பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பு பணிகளில் உலகிற்கே இந்தியா முன்மாதிரி: ஐ.நா., கூட்டத்தில் பிரதமர் மோடி

Updated : ஜூலை 17, 2020 | Added : ஜூலை 17, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: 'கொரோனா தடுப்பு பணிகளில் இந்தியா, உலகிற்கே முன்மாதிரியாக திகழுகிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, வைரசுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா வெற்றி கண்டிருக்கிறது' என ஐ.நா., உயர்நிலை கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார்.ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின், பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் கூட்டம் இன்று

புதுடில்லி: 'கொரோனா தடுப்பு பணிகளில் இந்தியா, உலகிற்கே முன்மாதிரியாக திகழுகிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, வைரசுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா வெற்றி கண்டிருக்கிறது' என ஐ.நா., உயர்நிலை கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார்.



latest tamil news



ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின், பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. கொரோனா பரவல் காரணமாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடந்த இக்கூட்டத்தில் 'கொரோனாவுக்கு பின் ஒத்துழைப்பு; 75ம் ஆண்டை கொண்டாடும், ஐ.நா., எப்படி செயல்பட வேண்டும்' என்ற தலைப்பில், பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.


உலக நாடுகளை விட இந்தியா சிறப்பு:


அவர் பேசியதாவது: இந்தியாவின் சுகாதார முறைகள், பிற நாடுகளில் இருப்பதை விட சிறப்பாக உள்ளது. 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து காசநோயை முற்றிலுமாக ஒழிக்க உறுதி எடுத்துள்ளோம். 2022ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும். இந்திய சுகாதார முறைகள் பிற உலக நாடுகளை விட சிறப்பாக உள்ளது. சிறப்பான செயல்பாட்டால், கொரோனாவிலிருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. உலக நாடுகளை விடவும், இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீள்பவர்கள் அதிகம்.


latest tamil news




வெற்றி கண்டிருக்கிறோம்:


கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றி இருக்கிறோம். இதன்மூலம் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி கண்டிருக்கிறோம். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருத்துவம் உள்ளிட்ட பிற உதவிகளை வழங்கி வருகிறோம். 50 கோடி இந்தியர்களை உள்ளடக்கிய மிகப்பெரிய காப்பீடு திட்டம் இந்தியாவில் செயல்படுகிறது.


latest tamil news




மிகப்பெரிய முன்னேற்றம்


அனைவருக்கும், அனைத்திலும் வளர்ச்சி என்ற உன்னத நோக்கத்தோடு இந்தியா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 6 லட்சம் கிராமங்களில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தி, 11 கோடி வீடுகளுக்கு கழிவறை வசதி செய்து கொடுத்திருக்கிறோம். மாநில அரசுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முக்கிய பிரதிநிதிகளாக அங்கம் வகித்து, நாட்டின் வளர்ச்சிக்கு கைகொடுக்கின்றனர். இந்தியாவின் வாழ்வாதார திட்டங்களில், சுய உதவி குழுக்களை சேர்ந்த 7 கோடி பெண்கள் ஒன்றிணைந்துள்ளனர். சுயஉதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் மூலம் பலரது வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


ஆழ்ந்த நம்பிக்கை


கடந்த 6 ஆண்டுகளில் 22 கோடி பெண்கள் வங்கி கணக்குகள் உட்பட, 40 கோடி புதிய வங்கி கணக்குகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எங்கள் அரசு எடுத்து வருகிறது. அமைதி மற்றும் நிலையான வளர்ச்சி பாதை மீது இந்தியா ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது.


latest tamil news




முக்கிய தருணத்தில்...


இரண்டாம் உலக போருக்கு பின், அமைதியை நிலைநாட்டவே ஐ.நா., தோற்றுவிக்கப்பட்டது. தற்போது கொரோனாவுக்கு எதிரான போருக்காக ஐ.நா., மீண்டும் சீர்திருத்தங்களுடன் மறுபிறப்பு எடுத்துள்ளது. முக்கியமான தருணத்தில் ஐ.நா., பாதுகாப்பு அவையில் இந்தியா இடம் பிடித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், ஆசிய - பசிபிக் நாடுகள் சார்பில், இந்தியா, இரண்டு ஆண்டுகளுக்கு தற்காலிக உறுப்பினராக, ஒரு மனதாக தேர்வான நிலையில், பிரதமர் மோடி, ஐ.நா., சிறப்பு கூட்டத்தில் உரையாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - chennai,இந்தியா
18-ஜூலை-202000:56:30 IST Report Abuse
Amal Anandan நம்மளைவிட குட்டிநாடு வியட்நாம் கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தி விட்டது அதானால் சீனாவில் இருந்து வெளியேறும் பல நிறுவனங்கள் வியட்நாம் பக்கம்.
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
18-ஜூலை-202000:55:41 IST Report Abuse
Amal Anandan இது ஊசிப்போன வடை.
Rate this:
Cancel
s.sivarajan - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூலை-202000:41:43 IST Report Abuse
s.sivarajan அத நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு எல்லாத்தயும் பாஸிட்டிவாவே எடுத்துக்க பழகிப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X