பொது செய்தி

தமிழ்நாடு

தங்க தட்டில் வைத்து முக கவசம் வினியோகம்

Added : ஜூலை 18, 2020
Share
Advertisement
தஞ்சாவூர் : கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் சார்பில், தங்கத் தட்டில் வைத்து முக கவசம் வழங்கி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தஞ்சாவூர், பாபநாசத்தில் உள்ள, 108 சிவாலயம் அருகில், கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தார் சார்பில், நேற்று கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதில், முக கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும்
 தங்க தட்டில் வைத்து  முக கவசம் வினியோகம்

தஞ்சாவூர் : கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் சார்பில், தங்கத் தட்டில் வைத்து முக கவசம் வழங்கி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தஞ்சாவூர், பாபநாசத்தில் உள்ள, 108 சிவாலயம் அருகில், கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தார் சார்பில், நேற்று கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதில், முக கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக, தங்கத் தட்டில், முக கவசங்களை வைத்து, பொதுமக்களுக்கு வழங்கினர்.இது குறித்து, திருவடிக்குடில் சுவாமிகள் கூறியதாவது: முக கவசத்தைத் தங்கத் தட்டில் வைத்து கொடுக்கும்போது, அது மக்களிடம் கூடுதல் கவனத்தை பெறுகிறது. அதனால் தான் தங்கத் தட்டில் வைத்து கொடுத்தோம்.

விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளும் தன்னார்வலர்கள் மற்றும் சேவை அமைப்புகளுக்கு உரிய அனுமதியை தமிழக அரசு வழங்க வேண்டும். அது கொரோனாவை கட்டுப்படுத்த, அரசுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X