அப்துல் கலாமின் நண்பர் கொரோனா தொற்றால் மரணம்

Updated : ஜூலை 18, 2020 | Added : ஜூலை 18, 2020 | கருத்துகள் (7) | |
Advertisement
ஊட்டி: ஊட்டி அருகே கடநாடு கிராமத்தை சேர்ந்தவர் போஜா கவுடர், 90. இவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, 13ம் தேதி ஊட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதியானதால், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று இறந்தார்.உயிரிழந்த போஜா கவுடர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின்
abdul kalam, abdul kalam friend, coronavirus, covid 19

ஊட்டி: ஊட்டி அருகே கடநாடு கிராமத்தை சேர்ந்தவர் போஜா கவுடர், 90. இவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, 13ம் தேதி ஊட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதியானதால், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, நேற்று இறந்தார்.

உயிரிழந்த போஜா கவுடர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கல்லுாரி நண்பர். அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது, 2006ல் ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அப்போது, போஜா கவுடரை மேடைக்கு அழைத்து, கல்லுாரி நினைவுகளை கூறி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். பின், மற்றொரு நண்பர் சம்பத் குமார் என்பவரும் சேர்ந்து, பெண் குழந்தைகள் கல்விக்காக, 'சேவ் அவர் டாட்டர்ஸ்' என்ற அமைப்பை துவக்கினர்.


latest tamil newsகடநாடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா கூறுகையில்,''சேவ் அவர் டாட்டர்ஸ் தொண்டு நிறுவனத்தின் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக, போஜா கவுடர் இருந்தார். 50 மாணவிகளுக்கு இலவசமாக கல்வி வழங்கி வந்தார். அவரது மறைவு மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. '' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
19-ஜூலை-202009:09:42 IST Report Abuse
Sampath Kumar ஆழ்ந்த வருத்தங்கள் ?? இங்கே தற்போது மரணங்கள் எல்லாம் கொச்சை படுத்த பட்டு வருகிறது
Rate this:
Cancel
Dr D Sivaraj - chennai,இந்தியா
18-ஜூலை-202012:42:52 IST Report Abuse
Dr D Sivaraj very proud of Thivathiru Iyya Boja Gowder for his Service to the society. Pray for his soul rest in peace.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
18-ஜூலை-202009:48:52 IST Report Abuse
Girija ஒருவர் அப்துல்கலாம் ஆலோசகர் என்ற பெயரில் அபத்தமாக அறிக்கை விடுகிறார். இவர் கலாமிற்கே அறிவுரை சொன்னவரா அல்லது அவரது தட்டச்சார ? அமெரிக்க பல் மருத்துவகழகத்தில் சைன்டிஸ்ட் படிப்பு படித்தததாக சொல்லுகின்றனர் , அப்படி ஒரு படிப்பு அங்கு இல்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X