பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை துவக்கம்

Updated : ஜூலை 18, 2020 | Added : ஜூலை 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சண்டிகர் : கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள, 'பாரத் பயோடெக்' நிறுவனம், அந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கையை நேற்று துவக்கியது.மூன்று பேருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டதாகவும், அவர்களுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றும், ஹரியானா அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட
Bharat Biotech,Covid-19 vaccine, coronavirus, coronavirus treatment, கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை துவக்கம்

சண்டிகர் : கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள, 'பாரத் பயோடெக்' நிறுவனம், அந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கையை நேற்று துவக்கியது.

மூன்று பேருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டதாகவும், அவர்களுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றும், ஹரியானா அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்துவதற்கு, இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.


latest tamil news




பல்வேறு நாடுகளில் இதற்கான முயற்சிகள் துவங்கியுள்ளன.நம் நாட்டிலும், தெலுங்கானா மாநிலம், ஐதராபாதை சேர்ந்த, பாரத் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதலுடன், 'கோவாக்சின்' என்ற தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியை துவக்கியுள்ளது.

ஹரியானா மாநிலம், ரோடாக்கில் உள்ள பி.ஜி., மருத்துவமனையில் இதற்கான நடவடிக்கைகள் முடிவடைந்து, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த கட்டமாக, இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்து பார்க்கும் நடவடிக்கை துவங்கியுள்ளதாக, ஹரியானா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.முதல் கட்டமாக மூன்று பேருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டதாகவும், மூன்று பேரும் இதற்கு முழுமையாக ஒத்துழைத்ததாகவும், அவர்களுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh - Atlanta,யூ.எஸ்.ஏ
18-ஜூலை-202004:53:02 IST Report Abuse
Suresh சிறப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X