பொது செய்தி

இந்தியா

லடாக்கில் பாராசூட் வீரர்கள் செய்த சாகசம் - திரில் வீடியோ!

Updated : ஜூலை 18, 2020 | Added : ஜூலை 18, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

லடாக்: லடாக்கில் வெள்ளியன்று நடைபெற்ற போர் ஒத்திகையின் போது பாராசூட் வீரர்கள், பனிச்சிகரத்தின் மீது பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்த சூப்பர் ஹெர்குலஸ் விமானத்திலிருந்து குதித்து சாகசம் செய்தனர். அந்த வீடியோவை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.



latest tamil news



இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில் கடந்த ஜூன் 15-ம் தேதி இரு தரப்பு வீரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உயர் மட்ட பேச்சுவார்த்தையால் இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெறுவதாக ஒப்புக்கொண்டுள்ளன. தற்போது லடாக்கிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

இன்று (ஜூலை 17) முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி எம்.எம் நரவணே ஆகியோருடன் சடாக்னா ராணுவ முகாம் பகுதிக்கு சென்று பாராசூட் வீரர்களின் சாகசத்தை பார்வையிட்டார்.

போர்க்களத்திற்கு பாராசூட் மூலம் வீரர்களை அனுப்பி வைப்பதற்கான ஒத்திகை நடைபெற்றது. அமெரிக்க தயாரிப்பான சி -130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானத்திலிருந்து ஆக்சிஜன் முகக்கவசங்கள் அணிந்த படி வரிசையாக வீரர்கள் குதித்தனர்.


latest tamil news



பின்னர் வீரர்களிடையே ராஜ்நாத் சிங் பேசியதாவது: உலகிற்கு சமாதானச் செய்தியை வழங்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. நாம் ஒருபோதும் எந்த ஒரு நாட்டையும் தாக்கியதில்லை, எந்தவொரு நாட்டின் நிலத்திற்கும் உரிமை கோரியதும் இல்லை. உலகம் ஒரு குடும்பம் என்ற செய்தியை இந்தியா நம்புகிறது. இவ்வாறு பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
18-ஜூலை-202017:08:16 IST Report Abuse
krish அவை எல்லாம் நாட்டின் பாதுகாப்பு ரகசியங்கள் அம்பலப்படுத்த தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்து நாம், நமது ராணுவத்தின் மீதும், ராணுவ வீரர்கள் மேலும் நம்பிக்கை வைப்போம் தர்மம் தோற்றதாக சரித்திரம் இல்லை. நம்பிக்கை துரோகம் வென்று நிலைத்ததாக சரித்திரம் இல்லை. எல்லையில் அமைதி நிலவ, இறைவன் அருள் புரியட்டும்
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
18-ஜூலை-202015:06:18 IST Report Abuse
vnatarajan தினமலரில் வீரர்களின் சாகச செயல்களை யுடுப் மூலம் மக்கள் பார்வைக்கு கொண்டுவரலாமே அதை பார்ப்பதற்கு மிகவும் ஆவலுடன் இருக்கிறோம்
Rate this:
Cancel
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
18-ஜூலை-202010:50:35 IST Report Abuse
Subramaniyam Veeranathan அந்த சாகச செயல் வீடியோ எங்கே?????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X