சீனாவை சரிசமமாகவே எதிர்கொள்கிறோம் : ராகுலுக்கு ஜெய்சங்கர் பதிலடி

Updated : ஜூலை 18, 2020 | Added : ஜூலை 18, 2020 | கருத்துகள் (36)
Share
Advertisement
jaishankar, rahul, rahul gandhi, சீனாவை சரிசமமாகவே எதிர்கொள்கிறோம் : ராகுல் கருத்துக்கு ஜெய்சங்கர் பதிலடி


புதுடில்லி:'பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், முக்கிய நாடுகளுடனான உறவு வலுவாகவும், உயர்வாகவும் உள்ளது. சீனாவை, அரசியல் ரீதியாக, சரிசமமாகவே எதிர்கொள்கிறோம்' என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான தவறுகள், பொறுப்பின்மை ஆகியவற்றால், கடந்த ஆறு ஆண்டுகளில், இந்திய வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம், அண்டை நாடுகளுடனான நட்புறவு ஆகியவை, பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, நாடு பலவீனமடைந்துள்ளதாக, காங்., - எம்.பி., ராகுல் தெரிவித்தார்.


latest tamil news




இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தனது டுவிட்டர்' பக்கத்தில், தொடர்ச்சியான பதிவுகளை, நேற்று வெளியிட்டார்.

அதன் விபரம்: இந்தியாவுடன் நல்லுறவு பாராட்டும், பல முக்கிய நாடுகளுடனான நட்பு, மிக வலுவாகவும், உயர்வாகவும் உள்ளது.அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன், தொடர் மாநாடுகளும், தலைவர்களுடனான சந்திப்புகளும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சீனாவை, அரசியல் ரீதியாக, சரிசமமாகவே இந்தியா எதிர்கொள்கிறது. இது பற்றி, நிபுணர்களின் கருத்தை கேட்டாலே, உண்மை நிலவரம் புரியும்.

சீனா -- பாக்., பொருளாதார பெருவழி சாலை, எல்லையில் சீனா அத்துமீறி சாலை அமைக்கும் முயற்சி, தென் சீன கடல் விவகாரம், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஐ.நா., தடை போன்றவற்றில், இந்தியா தன் நிலைப்பாட்டை, மிக வெளிப்படையாகவே பேசி வருகிறது.இலங்கை - சீனா இடையிலான அம்பன்தோட்டை துறைமுக ஒப்பந்தம், 2008ல் கையெழுத்தானது. அது பற்றி, நீங்கள் அப்போது கேள்வி எழுப்ப வேண்டியது தானே. வங்கதேச உடனான எல்லை விவகாரம், 2015ல் முடிவுக்கு வந்தது. அது, பல வளர்ச்சிகளுக்கு வழி வகுத்தது.இவ்வாறு, அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Kanchipuram,இந்தியா
30-ஜூலை-202020:29:00 IST Report Abuse
raja ஐயா உங்க மகன் நிறுவனம் சீனாவின் எடுபிடி என சொல்கிறார்களே அதை தெளிவு படுத்துங்க
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
18-ஜூலை-202016:20:02 IST Report Abuse
GMM ராகுல் பிஜேபியின் வெளியுறவு கொள்கை காங்கிரெஸ்யை விட சிறப்பு. காங்கிரஸ் போல் ஊழல் கிடையாது. நேர்மையாக உழைத்தால் பொருளாதாரம் பாதிக்காது. பாக்கிஸ்தான் சீனா ஆக்கிரமிப்பு நாடுகள்.சர்வாதிகார குணம் உடையவை. உறவாடி மோசடி செய்பவை. சீர்த்திருத்த பட வேண்டியவை. இந்தியா முன்பை விட அமெரிக்கா போன்ற நாடுகளின் உறவால் வலுவாக உள்ளது.உள்நாட்டு தேச விரோதிகள் தன்னை அடையாள படுத்தி வருகின்றனர். (ஆடி , மூன்றாம் நாள், சனி கிழமை }
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
18-ஜூலை-202015:40:01 IST Report Abuse
Anand இவனெல்லாம் ஒரு ஆளுன்னு நீங்க பதில் சொல்லிக்கிட்டு, அவனை நாட்டை விட்டு துரத்த துரித நடவடிக்கை எடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X