சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழகம் வழியே தப்பிய கடத்தல் ராணி ஸ்வப்னா!

Updated : ஜூலை 18, 2020 | Added : ஜூலை 18, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை: நாடு முழுதும், கொரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், கேரள தங்க கடத்தில் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயர், திருவனந்தபுரத்தில் இருந்து, கர்நாடகாவின் பெங்களூருக்கு, தமிழகம் வழியே தப்பி சென்ற தகவல், தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம்: தங்கம் பிடிபட்ட ஜூலை, 5 மாலை, 5:00 மணிக்கு, ஸ்வப்னா, அவரது கணவர், குழந்தைகள் மற்றும் சந்தீப்

சென்னை: நாடு முழுதும், கொரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், கேரள தங்க கடத்தில் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயர், திருவனந்தபுரத்தில் இருந்து, கர்நாடகாவின் பெங்களூருக்கு, தமிழகம் வழியே தப்பி சென்ற தகவல், தற்போது வெளியாகி உள்ளது.



latest tamil news



அதன் விபரம்: தங்கம் பிடிபட்ட ஜூலை, 5 மாலை, 5:00 மணிக்கு, ஸ்வப்னா, அவரது கணவர், குழந்தைகள் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர், திருவனந்தபுரத்தில் உள்ள வர்கலா என்ற இடத்திற்கு, காரில் தப்பி சென்றனர். அங்கு, இரண்டு நாட்கள் தங்கியவர்கள், தமிழகம் வழியே, பெங்களூரு செல்ல, 'இ -- பாஸ்' பெற்றுள்ளனர். ஜூலை, 7ல், கொச்சி சென்று, முன் ஜாமின் மனு தாக்கல் செய்ய, வழக்கறிஞரை சந்தித்துள்ளனர். அதற்குள், அவர்கள் மீது, சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் பாய்ந்ததால், முன் ஜாமின் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.


latest tamil news



இதையடுத்து, கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி உள்ளனர். பின், அங்கிருந்து, திருப்புனித்துராவில் உள்ள, நண்பரின் இடத்தில் தங்கி உள்ளனர். ஜூலை, 9 அன்று, காரில் புறப்பட்டு, திருச்சூர், பாலக்காடு, சேலம் வழியாக, பெங்களூரு சென்றுள்ளனர். அன்று இரவு, 1:39 மணிக்கு, பாலக்காட்டில் உள்ள, வாளையார் சோதனை சாவடியை கடந்துள்ளனர். அங்கிருந்து, 4 கி.மீ., துாரத்தில் உள்ள, தமிழக சோதனை சாவடிக்கு, அதிகாலை, 3:27க்கு வந்துள்ளனர்.


latest tamil news




இடையில், இரண்டு மணி நேரம் என்ன நடந்தது... அவர்கள் யாரையாவது சந்தித்தனரா அல்லது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, மேலிட உத்தரவுக்காக காத்திருந்தனரா என்பது குறித்து, அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.அந்த காரில், ஓட்டுனருடன் சேர்த்து, ஐந்து பேர் இருந்ததாகவும், சந்தீப் நாயர் தான் காரை ஓட்டி வந்ததாகவும், சோதனை சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18-ஜூலை-202018:25:51 IST Report Abuse
skv srinivasankrishnaveni இவ ஒரு இஸ்லாமியப்பொண்ணு ஆனால் ஹிந்து பெயரில் இவளை மாற்றி அந்த மதத்துக்கு மரியாதை தருதுங்களா ...
Rate this:
Cancel
murali - Chennai,இந்தியா
18-ஜூலை-202015:37:36 IST Report Abuse
murali பிஜேபி ஆளும் பெங்களூரில் தான் கைதுசெய்யப்பட்டாள் சொப்பன சுந்தரி
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
18-ஜூலை-202015:36:26 IST Report Abuse
Balasubramanian Ramanathan கர்நாடகா வழியா தோழமை ஆட்சி மாநிலம் மும்பை போவதாக இருந்திருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X