இந்த செய்தியை கேட்க
சென்னை: ஈ.வெ.ரா சிலை அவமதிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், ‛பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது,' எனக் கூறியுள்ளார்.
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஈ.வெ.ரா சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் ஊற்றி அவமதித்து சென்றனர். இதைத்தொடர்ந்து, ஈ.வெ.ரா சிலையை அவமதித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்திற்கு பல அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம். இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம். இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது.
— Kamal Haasan (@ikamalhaasan) July 18, 2020
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE