கல்லூரி தேர்வுகள்; யு.ஜி.சி., முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Updated : ஜூலை 18, 2020 | Added : ஜூலை 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Semester Exam, UGC, Supreme Court, Aditya Thackeray, SC, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, Final Year, exam, செமஸ்டர், தேர்வுகள், யுஜிசி, சுப்ரீம் கோர்ட், வழக்கு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: செப்டம்பருக்குள் 2019 கல்வி ஆண்டிற்கான கல்லூரி இறுதி செமஸ்டர்களை நடத்தி முடிக்க யு.ஜி.சி., உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை எதிர்த்து மஹாராஷ்டிரா அமைச்சர் ஆதித்ய தாக்கரே வழக்கு தொடர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் அனைத்து மாநிலங்களிலும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு உள்ளிட்ட பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. ஆனால் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்தபடியே இருப்பதால் செப்டம்பருக்குள் தேர்வு நடத்துவது சாத்தியமில்லை என தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கூறியுள்ளனர்.


latest tamil news


இந்த நிலையில் மஹாராஷ்டிர சுற்றுலா அமைச்சரும், முதல்வர் உத்தவ் தாக்கரே மகனுமான ஆதித்ய தாக்கரே யு.ஜி.சி., முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் யு.ஜி.சி., முடிவு குறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: மன அழுத்தம், முடிக்கப்படாத பாடத் திட்டங்கள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான அதிகப்பட்ச அபாயம் போன்ற காரணங்களால் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களே தேர்வுகளை ரத்து செய்துவிட்டன. உலகிலேயே மத்திய மனிதவள அமைச்சகம், யு.ஜி.சி.,யை தவிர எந்த கல்வி நிறுவனங்களும் ஒரு தேர்வை சார்ந்தில்லை. முந்தைய செமஸ்டர் அடிப்படையில் தேர்ச்சி அளிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - erode,இந்தியா
19-ஜூலை-202004:41:14 IST Report Abuse
rajan மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது மோடியின் சந்தோசம் பிஜேபி கொள்கை ஆர்எஸ்எஸ் கொள்கை
Rate this:
Cancel
amIRight - mumbai,இந்தியா
18-ஜூலை-202022:19:16 IST Report Abuse
amIRight ஏன் இதில் நாட்டின் தலைவர்களின் கருத்து என்ன? நீதிமன்றம் போனதே அரசாங்கத்தின் சொல்வியைத்தான் காட்டுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X