பொது செய்தி

இந்தியா

டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

Updated : ஜூலை 18, 2020 | Added : ஜூலை 18, 2020
Share
Advertisement
டுவிட்டர், ட்வீட்டர், முடக்கம், மத்திய அரசு, நோட்டீஸ், Central government, notice, Twitter, centre, celebrities, Twitter accounts

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: பல பிரபலங்களின், 'டுவிட்டர்' சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபர், பராக் ஒபாமா, பிரபல தொழிலதிபர்கள், எலான் மஸ்க், பில்கேட்ஸ், அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடனின், பிரபல தொழிலதிபர்கள், வாரன் பபேட், பெஜோஸ், மைக் புளூம்பர்க், பாடகர்கள், கான்யே வெஸ்ட் உட்பட பல பிரபலங்களின் 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், கணக்குகளும் முடக்கப்பட்டு பிட்காயின் மோசடி நடந்துள்ளது.


latest tamil news



இதனையடுத்து இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியன் கணிப்பொறி அவசரகால நடவடிக்கை குழு(சிஇஆர்டி- ஐஎன்) டுவிட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதில், டுவிட்டர் சமூக வலைதளகணக்குகள் முடக்கப்பட்டதில், எத்தனை இந்திய பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய டுவீட்கள் மற்றும் இணையதள லிங்குகளை எத்தனை இந்தியர்கள் பார்த்துள்ளனர். அதில் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா?
டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விளக்கும்படி அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X