பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 4,807 பேர் கொரோனாவால் பாதிப்பு; 88 பேர் பலி

Updated : ஜூலை 18, 2020 | Added : ஜூலை 18, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 18) இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 4,807 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,65,714 ஆகவும், பலி எண்ணிக்கை 2,403 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,807 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,731 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 76 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,65,714 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 111 ஆய்வகங்கள் (அரசு-56 மற்றும் தனியார்-55) மூலமாக, இன்று மட்டும் 48,195 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 18 லட்சத்து 79 ஆயிரத்து 499 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.


latest tamil newsஒரு லட்சம் ஆண்கள்

இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,907 பேர் ஆண்கள், 1,900 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 970 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 64,721 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 3,049 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 856 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 88 பேர் உயிரிழந்தனர். அதில், 24 பேர் தனியார் மருத்துவமனையிலும், 64 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,403 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 49,452 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jay - toronto,கனடா
19-ஜூலை-202017:51:35 IST Report Abuse
jay ஊர்டங்கை மதிக்காமல் உர்ர் சுக்கும் பலரால் இது ,,
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
19-ஜூலை-202011:17:51 IST Report Abuse
R.Kumaresan தமிழ்நாட்டில் வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு போட்டு நிறைய பேர் பலியாயியுள்ளனர் அதிகம்தான்..
Rate this:
Cancel
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
19-ஜூலை-202010:10:23 IST Report Abuse
K E MUKUNDARAJAN சபாஷ், சுகாதாரத்துறை. நாற்பத்தி எட்டாயிரம் மாதிரிகள் பரிசோதனை ஒரு சாதனை. தொற்று பற்றி கவலை வேண்டாம். நீங்கள் சீக்கிரம் கண்டுபிடித்து,, சீக்கிரம் மருத்துவ உதவி அளித்து. சீக்கிரம் வீடு திரும்புவதில் தான் கொரனவை ஒழிக்க முடியும். கீப் இட் அப்.
Rate this:
Unmai Vilambi - Kuwait,குவைத்
19-ஜூலை-202012:52:46 IST Report Abuse
Unmai VilambiGood response. Appreciate your positives....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X