பொது செய்தி

இந்தியா

அசாம் கனமழை, வெள்ளத்தால் 54 லட்சம் பேர் பாதிப்பு; 76 பேர் பலி

Updated : ஜூலை 18, 2020 | Added : ஜூலை 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
assam, flood, rain, assam flood, death, toll, அசாம், வெள்ளம், கனமழை, 54 லட்சம் பேர்,பாதிப்பு, 76 பேர் பலி

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 54 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 76 பேர் பலியாகி உள்ளனர்

அசாம் மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடரும் கனமழையால் பிரம்மபுத்திராவிலும் அதன் துணையாறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக மாநிலத்திலுள்ள 30 மாவட்டங்களில் 54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் தேமாஜி, லட்சுமிபுர், பிஸ்வாந்த், சோனிட்புர், டாரங், பக்ஸா, நல்பாரி, பார்பேட்டா, சிராங், போங்கைகான், கோக்ரஜ்ஹார் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதுவரை வெள்ளத்தில் சிக்கி 76 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news




latest tamil news



தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 76 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு 552 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 3,014 கிராமங்களில் 2 லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவிலான பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. காசிரங்கா சரணாலயத்தின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் அங்குள்ள காண்டாமிருகங்கள் நெடுஞ்சாலைகளுக்கும் மேட்டுப் பகுதிகளுக்கும் தப்பிச் சென்றுள்ளன. இவ்வாறு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
18-ஜூலை-202023:20:07 IST Report Abuse
Ray இங்கே கந்த ஷஷ்டி பெரியார் சிலைன்னு பத்திகிட்டு எரியறப்போ இதெல்லாம் ஒரு சேதின்னு போட்டுக்கிட்டு
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
18-ஜூலை-202022:26:29 IST Report Abuse
Ramesh Sargam கொரோனா போதாது என்று இந்த மழைவெள்ளம் வேறு. மக்கள் என்னதான் செய்வார்கள். அரசும் எப்படித்தான் உதவிட முடியும். ஆண்டவா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X