அதிகாரிக்கு கொரோனா: முதல்வர் அலுவலகத்துக்கு சீல்!

Updated : ஜூலை 18, 2020 | Added : ஜூலை 18, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், முதல்வர் அலுவலகத்தை பூட்டி 48 மணி நேரம் சீல் வைக்கப்பட்டுள்ளது.



latest tamil news



உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 1,108 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 47 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கான்பூர், ஆக்ரா, மீரட் போன்ற நகரங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news



உ.பி அரசு மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியதாக மோடி பாராட்டி வந்த நிலையில், தற்போது கொரோனா வேகமெடுத்துள்ளதால் யோகி ஆதித்யநாத் அதிகாரிகள் மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லக்னோவில் உள்ள முதல்வர் அலுவலக அதிகாரிகள் சிலருக்கு சனிக்கிழமை தொற்று உறுதியானது. இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு முதல்வர் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்துள்ளனர். அதே டி.ஜி.பி அலுவலகத்திலும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூலை-202006:56:04 IST Report Abuse
தமிழ் உ. பி ல தடுப்பு நடவடிக்கை ஆஹா ஒஹோ ன்னு பில்டப் எல்லாம் கொடுத்தானுங்க.
Rate this:
Cancel
19-ஜூலை-202005:58:32 IST Report Abuse
ஆப்பு சரிதான்.. எல்லோருக்கும் கோமியத்துடன் கிருமிநாசினியும் கலந்து தெளிச்சுர வேண்டியதுதான்.
Rate this:
Cancel
19-ஜூலை-202005:57:22 IST Report Abuse
ஆப்பு போனவாரம் தான் உ.பீ ல கொரோனாவை மிகச் சிறப்பாக கையாண்டதா தன்னார்வலர் கூட்டத்தில் பெரீவரு உரையாற்றினார். வாழ்க யோகியாரின் ஆட்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X