எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பசு கோமியம் குடிங்க : மே.வ. பா.ஜ,.தலைவர் அறிவுரை

Updated : ஜூலை 18, 2020 | Added : ஜூலை 18, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement

கோல்கட்டா: பசுவின் பாலில் தங்கம் இருப்பதாக கடந்தாண்டு கூறிய அதே பா.ஜ., தலைவர் இப்போது பசு கோமியத்தை குடிக்க அறிவுறுத்தி உள்ளார்.

கடந்த2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி கொண்டுள்ளது. இதற்கான மருந்துகள் கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.



latest tamil news



இந்தியாவிலும் இக்கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்தவும் தனி மனிதரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கவும் பல்வேறு மருத்துவ முறைகள் கூறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மே.வங்க. பா.ஜ.,தலைவர் திலீப் கோஷ் பசுமின் கோமியத்தை குடித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அறிவுறுத்தி உள்ளார்.


latest tamil news




இது குறித்து மே.வங்க மாநிலத்தில் துர்காபூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறி இருப்பதாவது:மக்கள் கொரோனா வைரசால் அவதிப்படுகிறார்கள் . ஒரு கழுதைக்கு பசுவின் மதிப்பு புரியாது . இது இந்தியா, பகவான் கிருஷ்ணரின் நிலம், இங்கே மாடுகள் கடவுள், நாங்கள் வணங்குகிறோம். ஆரோக்கியமாக இருக்க எங்களுக்கு பசு சிறுநீர் இருக்கும் "ஆயுர்வேத மருந்து எடுத்துக் கொள்ளுங்கள், கவலைப்பட வேண்டாம்" மது உட்கொள்பவர்கள், ஒரு பசுவின் மதிப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்வார்கள் என கூறினார்.

திலீப்கோஷ் மாடுகள் குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறை அல்ல. நவம்பர் 2019 ல் கோஷ், பசுவின் பாலில் தங்கம் உள்ளது எனகூறி இருந்தது சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலான விமர்சனங்களைத் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
19-ஜூலை-202014:17:44 IST Report Abuse
தல புராணம் //அவுரு சொல்றது ரொம்ப சரி.. எந்த மாட்டுக்காவது கொரோனா வந்திருக்கா?// ஆப்பு, எந்த ......
Rate this:
Cancel
Scorpio - New York,யூ.எஸ்.ஏ
19-ஜூலை-202009:17:20 IST Report Abuse
Scorpio நம் நாட்டில் கருப்பு அறிவாளிகள் - படித்த அறிவாளிகள் - இருக்க - இப்படி சிலர் இருப்பது நல்லதே - கருத்து வேற்றுமை - இயற்கையின் கலைகள் -
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
19-ஜூலை-202008:45:35 IST Report Abuse
vnatarajan பசு மூத்திரத்தை பால் உற்றுபவர்களிடமிருந்து வாங்கி வீட்டின் தோட்டத்திலுள்ள செடிகளுக்கு விடுவார்கள். முக்கியமாக புடுங்க கோடிக்கு கிராமத்தில் விடுவதை நான் பார்த்திருக்கிறேன்.செடியை பூச்சி தாக்காமலும் புடலங்காய் அதிக நீளமாகவும் வளர்வதற்கு அது உதவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X