கொரோனா வைரசின் மாயப்பிடியில் சிக்கி, நாடு முழுதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர்; லட்சக்கணக்கானோர் குணமடைந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
கொரோனா பீதியில், நாடு முழுதும் மக்கள் உறைந்திருக்க, நம் எல்லையில் உள்ள, நம் சொந்த மண்ணான, லடாக் அருகே உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவம், நம் வீரர்கள், 20 பேரை கொன்று குவித்துள்ளது.இதையடுத்து, ஒட்டுமொத்த இந்தியர்களும், 'சீனா மீது பதிலடி தாக்குதல் நடத்த வேண்டும்; நம் வீரர்களை கொன்றவர்களை கொல்ல வேண்டும்' என வெகுண்டெழுந்தனர். உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், நேரடி போரில் ஈடுபடுவது சரியாக இருக்காது என கருதிய, மோடி அரசு, சீனாவுடன் பேச்சில் இறங்கியது.
பிரதமரின் விருப்பம்
ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களும், போர் வியூகங்களை அறிந்தவர்களும், 'இப்படித் தான், 1962ல் சீன ராணுவம், சில, கி.மீ., பின்வாங்கியது; அதன் பின், திடீரென போர் தொடுத்தது. அந்த போரில், இந்தியா தோல்வி கண்டது. 'பல நுாறு, கி.மீ.,யை சீனா பிடித்துக் கொண்டது. மீண்டும் அதுபோல நடக்க வாய்ப்பு இருக்கிறது' என்றனர்.வாய் உள்ளவர்களும், சிந்தனைத் திறன் கொண்டவர்களும், தங்கள் விருப்பம் போல பேசத் தான் செய்வர்; சிந்திக்கத் தான் செய்வர். 130 கோடி மக்களை வழிநடத்திச் செல்லும் அரசு, எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற ரீதியில் செயல்பட முடியாது.
எல்லையில் சீன ராணுவம் அத்துமீறியது என்பதற்காகவும், நம் வீரர்கள், 20 பேரை கொன்றது என்பதற்காகவும், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தவோ, சீன வீரர்களை கொன்று குவிப்பதோ சரியானதாக இருக்காது என, மோடி அரசு கருதியது.மேலும், இந்த விவகாரத்தால், இத்தனை ஆண்டுகளாக, இந்தியா பெற்று வந்துள்ள நல்ல பெயர், பொருளாதார வளர்ச்சி, சர்வதேச அரங்கில் இருக்கும் மதிப்பை கெடுத்துக் கொள்ள பிரதமர் மோடி விரும்பவில்லை. எப்போதுமே அவரின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும்.அதுபோல, அமைதிப்பேச்சு என்ற ஆயுதத்துடன் களம் இறங்கி, வெற்றி கண்டுள்ளார்.அப்படியானால், நம் வீரர்கள், 20 பேர் பலியானதற்கு என்ன தான் பதில், அவர்கள் சிந்திய ரத்தத்திற்கு என்ன பலன் என, பலரும் சிந்திக்கலாம். அவர்களுக்கான பதில் தான், இந்த கட்டுரை.
தொழிலாளர்கள் வாழ்வு
இதன் மூலம், அந்த, நில வளைப்பு மளிகைக்கடைக்காரருக்கு, மறைமுகமாக பதில் அளிப்போம்.அதற்காக, அந்த கடைக்காரரிடம் சண்டையிட்டு, அவரின் பொருட்களை தீயிட்டு கொளுத்தி, வன்முறை வெறியாட்டம் நடத்துவதால், விவகாரம் தான் பெரிதாகுமே தவிர, பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது.அதுபோலத் தான், சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்க, நேரடி சண்டை வேண்டாம். அந்த நாடுகளின் தயாரிப்புகளையும், அந்த நாட்டு நிறுவனங்களின் சேவைகளையும் தவிர்ப்பது தான் சரியானதாக இருக்கும்.அதைத் தான், மத்தியில் ஆளும், மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது.
சமூக வலைதளங்களை தங்கள் ஆளுமையின் கீழ் கொண்டு வந்திருந்த, 50க்கும் மேற்பட்ட சீன, சமூக வலைதள செயலிகளை, நம் நாட்டில் பயன்படுத்த தடை விதித்து, அவற்றின் இணைப்புகளை துண்டித்துள்ளது. இதுவே, அந்த நாட்டிற்கு, நாம் விடுக்கும் முதல் எச்சரிக்கை.இதனால், அந்நாட்டின் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், தள்ளாட துவங்கும். நம் நாட்டின், 130 கோடி மக்கள் தான், நம் நாட்டின் பலம்; நம் நாட்டின் செல்வச் செழிப்புக்கு, இந்த மக்கள்தொகை தான் காரணம்.அவர்களில், 5 - 10 சதவீதம் பேர், சீன சமூக வலைதள செயலிகளை கைவிட்டுள்ளதன் மூலம், சரியான பதிலடி கொடுத்துள்ளோம்.சீன அத்துமீறலுக்கு பின், இந்திய மக்களிடம் ஏற்பட்டுள்ள மனமாற்றத்தால், சீன தயாரிப்புகளுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக விடை கொடுக்கத் துவங்கிஉள்ளனர்.விலை மலிவாக இருக்கிறது என்பதற்காக, சீன பொருட்களை ஏராளமாக, அளவுக்கு அதிகமாக வீடுகளில் வாங்கி குவித்துள்ளோம். அவற்றிற்கு முதலில் தடை விதிப்போம்.நாம் வாங்கும் பொருட்களால், சீனா வாழ்கிறது; சீன நிறுவனங்கள் செழிக்கின்றன. அதற்குப் பதில், நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்குவோம். இதனால், நம் தொழிலாளர்கள் வாழ்வு சிறக்கும்.
புறக்கணிப்போம்
அந்த பொருட்கள் விற்பனையால், நம்மவர்கள் தானே, லாபம் அடைகின்றனர்; வளர்ச்சி அடைகின்றனர் என கேட்கலாம்.ஆனால், உண்மை அதுவல்ல. ஒரு பொருளை, வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்து விற்பதைக் காட்டிலும், அதை உள்நாட்டிலேயே தயாரித்து, அதை உள்நாட்டு சந்தையில் விற்று கிடைக்கும் மூலதனம், பணம் தான், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்.
சீனாவில் பெருமளவு தயாரித்து, அவற்றை, குறைந்த லாபத்தில் பிற நாடுகளுக்கு விற்று கிடைக்கும் பணம், சீனாவுக்குத் தான் செல்லும்.இதுபோல, உலக நாடுகள் அனைத்திலிருந்தும், சீனாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பணம் கிடைத்ததால் தான், அந்நாடு இவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது.எனினும், சில பொருட்களை, சில நாடுகள் தான் உற்பத்தி செய்யும். அவற்றில் சிலவற்றை சீனா மட்டுமே உற்பத்தி செய்யும் நிலை உள்ளது.அத்தகைய பொருட்களையும் புறக்கணிப்போம் என இறங்கினால், நிலைமை விபரீதமாக ஆகி விடும். எனவே, படிப்படியாக, அத்தியாவசியம் இல்லாத சீன தயாரிப்புகளை புறக்கணிப்போம்.இதனால், தானாகவே, நம் நாட்டின் உற்பத்தி மேம்படும்.
'மேக் இன் இந்தியா' எனப்படும், இந்தியாவில் உற்பத்தி மேம்பட வேண்டும் என, பாடுபடும் மத்திய அரசுக்கு, நம் லேசான மாற்றம், பெரிய உத்வேகத்தை கொடுக்கும்.எனக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு, சீன உணவு வகைகள் மிகவும் பிடிக்கும். குறிப்பாக, மஞ்சூரியன், பிரைடு ரைஸ் போன்றவை, அவருக்கு மிகவும் பிடித்தமானவை.இந்தியா மீது சீன அத்துமீறலுக்கு பின், சீன உணவகங்களுக்கு சென்று சாப்பிடுவதையே அவர் தவிர்த்து விட்டார்.நாட்டின் நலனுக்காக, நாக்கு ருசியையே அவர் மறந்து விட்டார். அது சரியா, தப்பா என்ற விவாதம் ஒரு பக்கம் உள்ளது. எனினும், இதுபோன்ற சூழ்நிலையில், அப்படித் தான் எல்லாரும் இருக்க வேண்டும்.சீனா போல, ஒவ்வொரு நாடும், பிற நாடுகளின் நிலங்களை கைப்பற்றி வந்தால், உலகில் அமைதி நிலவுமா... எனவே, சீனாவுக்கு தக்க பாடம் கற்பிக்க, அந்நாட்டு பொருட்களை புறக்கணிப்பது தான் சரியானதாக இருக்கும்.
எளிய உதாரணம்
நாம் நோயின்றி இருப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்கும், பார்ப்பதற்கு அழகாகத் தெரிவதற்காகவும் தானே.சீனா போல, பக்கத்து வீட்டுக்காரரை அடித்தால், சிறையில் தான் போய் இருக்க வேண்டி இருக்கும்.இந்த சாதாரண உண்மையை அறிந்ததால் தான், சீனாவும் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது. அவ்வாறே சீனா தொடர்ந்து இருக்க, சீன பொருட்களை தவிர்ப்போம்.எந்தப் பொருள் வாங்கினாலும், இந்திய தயாரிப்பு அதில் இருந்தால், அதற்கு முன்னுரிமை கொடுப்போம். நாம் வாங்குவோம் என்பதற்காகத் தான், இந்திய குக்கிராமங்களில் ஏழை விவசாயிகளும், தொழிலாளர்களும் பாடுபட்டு கொண்டுள்ளனர்.அவர்களை நினைத்தாவது, இந்திய பொருட்களை வாங்குவோம்; சீன பொருட்களை தவிர்ப்போம்! தொடர்புக்கு:இ - மெயில்:mdurgn@gmail.comமொபைல்: 9751607927
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE