'ஈரானில் 2.5 கோடி பேருக்கு கொரோனா உறுதி': அதிபரின் முரண்பாடான தகவலால் குழப்பம்

Updated : ஜூலை 18, 2020 | Added : ஜூலை 18, 2020
Share
Advertisement
டெஹ்ரான்: ஈரானில் 2.5 கோடி பேருக்கு கொரோனா உறுதியானதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார். மேலும் 3.5 கோடி தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் அறிவித்துள்ளார்.அரசு தொலைக்காட்சியில் பேசிய அவர், ' ஈரானில் இதுவரை 2.6 லட்சம் பேர் கொரோனா சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதுவரை 14,000 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டனர்.' என்று தெரிவித்தார்.இதுவரை 2,69,440

டெஹ்ரான்: ஈரானில் 2.5 கோடி பேருக்கு கொரோனா உறுதியானதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார். மேலும் 3.5 கோடி தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அவர் மேலும் அறிவித்துள்ளார்.



latest tamil news



அரசு தொலைக்காட்சியில் பேசிய அவர், ' ஈரானில் இதுவரை 2.6 லட்சம் பேர் கொரோனா சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதுவரை 14,000 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டனர்.' என்று தெரிவித்தார்.இதுவரை 2,69,440 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் அதிபர் அதை விட பல மடங்கான எண்ணிக்கையை அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அதிகாரிகள் தலைநகர் டெஹ்ரானில் மத நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், பள்ளிக்கூடங்கள், ஹோட்டல்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மிருகக்காட்சி சாலைகள் போன்றவற்றிற்கு ஒரு வார காலம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.


latest tamil news



எட்டுக் கோடி மக்கள் தொகை கொண்ட ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிப்பை சந்தித்தது. பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கடந்த ஏப்., மத்தியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து கொரேனா பரவல் அங்கு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 188 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதையடுத்து கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 13,979 ஆக உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X