உறவினர்கள் கைவிரிப்பு : தள்ளுவண்டியில் கணவனின் உடலை எடுத்து சென்ற மனைவி

Updated : ஜூலை 18, 2020 | Added : ஜூலை 18, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

பெலகாவி: கர்நாடக மாநிலம் அதானி நகர் சாலையில் இதயம் துடிக்க வைக்கும் காட்சி நடந்தது. உறவினர் கைவிட்டதால், இறந்த கணவனின் உடலை தள்ளுவண்டி உதவியுடன் மனைவி, மகன் தகனம் செய்யும் இடம் வரை கொண்டு சென்றனர்.latest tamil news55 வயதான சதாஷிவ் ஹிராட்டி புதன்கிழமை இரவு அவரது மனைவி, மகன் மற்றும் மகளுடன் அருகில் உள்ள சிக்காட்டிக்கு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். அங்கு தனி அறையில் சதாஷிவ் ஹிராட்டி தங்கி இருந்தார். இந்நிலையில் காலையில், சதாஷிவ் ஹிராட்டியை எழுப்புவதற்காக, கதவை தட்டினர். பலமுறை கதவை தட்டியும் எந்த பதிலும் கிடைக்காத நிலையில் பக்கத்து வீட்டார் உதவியுடன் கதவை திறந்தனர். அப்போது நாற்காலியில் சதாஷிவ் ஹிராட்டி இறந்து கிடந்தார்.


latest tamil newsஇதனை தொடர்ந்து மாரடைப்பால் அவர் இறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில் உறவினர்கள் சதாஷிவ் ஹிராட்டி குடும்பத்திற்கு உதவ மறுத்தனர். கொரோனா தொற்றால் இறந்திருப்பார் என்ற பயத்தால் அவர்கள் உதவவில்லை என தெரிகிறது. இதனை தொடர்ந்து சதாஷிவ் ஹிராட்டி உடலை ஒரு தள்ளுவண்டிக்காரர் உதவியுடன் தகனம் செய்யும் இடம் வரை மனைவியும், மகனும் கொண்டு சென்றனர். எங்கே செல்கிறது மனித நேயம்.Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi - chennai,இந்தியா
21-ஜூலை-202018:41:45 IST Report Abuse
ravi அங்கிருக்கும் அரசு அதிகாரிகளை பணியிலிருந்து வீட்டுக்கு அனுப்புங்கள் - கேவலமாக இல்லையா இது
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
19-ஜூலை-202012:29:27 IST Report Abuse
Rafi இந்துக்களின் பாதுகாப்பாளர்கள் இது போன்ற நிகழ்வில் காணாமல் போனவர்கலாகவே இருப்பார்கள். இது போன்றவர்களுக்கு உதவுவதற்காகவே இஸ்லாமிய அமைப்பினர் நாடெங்கிலும் சேவை செய்து வருகின்றார்கள். நேற்று கூட ஒரு பிஜேபி கட்சி நிர்வாகியின் உறவினர் கொரானாவில் இறந்தவரை இறுதி சடங்கு நடத்த கேட்டு கொண்டு, தூற்றுவார் தூற்றட்டும் நம் சேவையை தொடருவோம் என்று இஸ்லாமிய அமைப்பினர் இறுதி சடங்கை நிறைவேற்றி கொடுத்ததை தொலைக்காட்சியில் பார்த்தோம்.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
19-ஜூலை-202008:20:37 IST Report Abuse
vnatarajan உள்ளு பிஜேபி தொண்டர்கள் ஏன் உதவி செய்யவில்லை. அவர்கள் உதவி செய்ய முன் வரவில்லையென்றால் அட்லீஸ்ட் உள்ளுர்ர் போலீசுக்கு தகவல் கொடுக்கலாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X