ஒரே நாளில், 34,884 பேருக்கு தொற்று மொத்த பலி, 26,273 ஆக அதிகரிப்பு

Added : ஜூலை 18, 2020
Share
Advertisement

புதுடில்லி : நாட்டில், நேற்று ஒரே நாளில், 34 ஆயிரத்து, 884 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர்;

இதுவரையிலும், 26 ஆயிரத்து, 273 பேர் இறந்துள்ளனர்.மத்திய சுகாதார அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிக்கை:கொரோனா பாதிப்பு, தொடர்ந்து மூன்றாவது நாளாக, 30 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில், 34 ஆயிரத்து, 884 பேரிடம், வைரஸ் தொற்று கண்டறியப் பட்டது. இதையடுத்து, வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 10 லட்சத்து, 38 ஆயிரத்து, 716 ஆக உயர்ந்துள்ளது.பாதிப்பில், 2.93 லட்சம் பேருடன், மஹா., முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக, தமிழகத்தில், 1.61 லட்சம்; டில்லியில், 1.20 லட்சம்; கர்நாடகாவில், 55 ஆயிரத்து, 115 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் தொற்றில் இருந்து, ஆறு லட்சத்து, 53 ஆயிரத்து, 750 பேர் குணமடைந்துள்ளனர்.இது, பாதிப்பில் இருந்து மீண்டுள்ளோர் விகிதத்தை, 62.94 சதவீதமாக உயர்த்தியுள்ளது.மஹா.,வில், நேற்று மட்டும், 258 பேர் இறந்துள்ளனர்.கர்நாடகாவில், 115; தமிழகத்தில், 79; ஆந்திராவில், 42; உ.பி.,யில், 38; மே., வங்கம் மற்றும் டில்லியில், தலா, 26 பேர் உள்ளிட்ட, 671 பேர், நேற்று பலியாயினர்.இவர்களுடன், வைரஸ் தொற்றால் இதுவரை, 26 ஆயிரத்து, 273 பேர் இறந்துள்ளனர்.ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கையிலும், 11 ஆயிரத்து, 452 பேருடன், மஹா., முதலிடத்தில் தொடர்கிறது.அடுத்ததாக, டில்லியில், 3,571; தமிழகத்தில், 2,315; குஜராத்தில், 2,106; கர்நாடகாவில், 1,147 பேரும் இறந்துஉள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X