மஹா.,வில் கொரோனா சிகிச்சை கட்டணம் ; மருத்துவமனைகள் மோசடி

Updated : ஜூலை 18, 2020 | Added : ஜூலை 18, 2020
Share
Advertisement

தானே : மஹா.,வின் தானேவில் உள்ள, 15 தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சைக்கு வந்தவர்களிடம், 27 லட்சம் ரூபாயை கூடுதலாக வசூலித்திருப்பது, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.



latest tamil news



மஹா.,வில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தானே மாநகராட்சி நிர்வாகம் சார்பில், நகரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தரப்பட்ட, கொரோனா சிகிச்சைக்கான, 'பில்'கள், முதற்கட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில், 196 பில்களில், 27 லட்சம் ரூபாய் வரை, கூடுதல் கட்டணம் வசூலித்திருப்பது கண்டறியப்பட்டது.


latest tamil news



இதையடுத்து, வசூலிக்கப்பட்ட கூடுதல் பணத்தை, உரியவர்களிடம் திரும்ப வழங்க வேண்டும் என, மருத்துவமனைகளுக்கு, மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X