சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

கந்தர் சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய 'கருப்பர் கூட்டம்': கண்டு கொள்ளாத ஆன்மிகவாதிகள், அரசியல் கட்சியினர்

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (160) | |
Advertisement
‛கருப்பர் கூட்டம்' என்ற அமைப்பினர், கந்தர் சஷ்டி கவசத்தை, கொச்சைப்படுத்தி, 'யூ-டியூப்'ல் வெளியிட்டது பக்தர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஓட்டு வங்கிக்காக அரசியல் பிரபலங்கள் குரல்கொடுக்காததும், ஆன்மிகவாதிகள் என தங்களை காட்டிக்கொள்ளும் பிரபல நடிகர் கூட வாய்திறக்காததும், மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் கடவுள்
கந்தர் சஷ்டி, கந்தர் சஷ்டி கவசம், கருப்பர் கூட்டம், ஆன்மிகவாதிகள், அரசியல் கட்சியினர்

‛கருப்பர் கூட்டம்' என்ற அமைப்பினர், கந்தர் சஷ்டி கவசத்தை, கொச்சைப்படுத்தி, 'யூ-டியூப்'ல் வெளியிட்டது பக்தர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஓட்டு வங்கிக்காக அரசியல் பிரபலங்கள் குரல்கொடுக்காததும், ஆன்மிகவாதிகள் என தங்களை காட்டிக்கொள்ளும் பிரபல நடிகர் கூட வாய்திறக்காததும், மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் கடவுள் முருகனிடம், உச்சி முதல் உள்ளங்கால் வரையான உடல் உறுப்புகளின் நலன் வேண்டி, பால தேவராயரால் எழுதப்பட்ட கந்த சஷ்டி கவசம், எளிய மக்களும் உச்சரிக்கும் தமிழ் மந்திரமாக விளங்குகிறது.

இதை, 'கருப்பர் கூட்டம்' எனும், யு-டியூப் சேனலில், ஆபாசமாக சித்தரித்து பேசியது, தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையை தலைமையிடமாக கொண்ட, 'கருப்பர் கூட்டம்' அமைப்பு சார்பில் சுரேந்தர் உட்பட சிலர், கந்தர் சஷ்டி கவசம் குறித்து, ஆபாசமான விமர்சனங்களை முன்வைத்தனர். இறை நம்பிக்கை தொடர்பான ஒவ்வொரு வார்த்தைக்கும், இழிவான விளக்கங்களை தெரிவித்து, முருக பக்தர்கள் உட்பட இந்து மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 50க்கும் மேற்பட்ட இடங்களில், இப்பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை கோரி, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேந்தர், செந்தில்வாசன் உட்பட சிலரை கைது செய்து, சென்னையில் உள்ள அவர்களது அலுவலகத்தை சீல் வைத்தனர்.


latest tamil news
இது தொடர்பாக, பா.ஜ., தலைவர் எச்.ராஜா தன் டிவிட்டர் பக்கத்தில், 'கந்தன் கருணையே கருணை. நான்கு நாட்களில் இரு சம்பவங்கள். நான்கு நாட்களாக முதல் சம்பவத்துக்கு வாயே திறக்காத தலைவர்கள், இன்றைய சம்பவத்துக்கு கண்டனம் கூறுகின்றனர். அனைவரும், இந்துக்கள் முன் தோலுரித்து காட்டப்படுவீர். வெற்றிவேல்; வீரவேல்' என, தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மையம் துணை தலைவர் டாக்டர் மகேந்திரன், தன் டுவிட்டரில், 'சமூக விமர்சனம் என்ற போர்வையில் சக மனிதர்களின் நம்பிக்கையை அவமரியாதை செய்வது தவறு. அதை கொச்சைப்படுத்துவது அதைவிட தவறு' என, தெரிவித்துள்ளார்.

ஆனால், நடிகர் கமல் வாய் திறக்கவில்லை.நடிகர் பிரசன்னா, கஸ்துாரி, சின்னத்திரை நடிகர், நடிகைகள் பலரும் கருப்பர் கூட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

முருக கடவுளுக்கு எதிரான கருத்து சர்ச்சையால், முருகனின் அறுபடை வீடுகளான திருச்செந்துார், சுவாமிமலை உள்ளிட்ட சில கோவில்களில் கந்த சஷ்டி கவசத்தை கோவில், வீதிகளில் கூட்டமாக உச்சரித்து மக்களிடம் கொதிப்பை அடக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில்தான், ஸ்ரீபாலன் தேவராயன் கந்த சஷ்டி கவசத்தை இயற்றி, அரங்கேற்றம் செய்த ஸ்தலமாக உள்ளதால், அங்குள்ள அர்ச்சகர்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர். அங்கு, அர்ச்சகர்கள், வணிகர்கள், பல்வேறு ஆன்மிக அமைப்பினர், பொது அமைப்பினர் சேர்ந்து ஊர்வலமாக சென்று, போலீஸில் புகார் செய்து, கருப்பர் கூட்டம் மீது நடவடிக்கை கோரியுள்ளனர்.

ஆனால், ஆன்மிக சொற்பொழிவாற்றுவதை, முக்கியமாக கொண்டுள்ள பலர், இதுகுறித்து வாய் திறக்க மறுக்கின்றனர். குறைந்தபட்ச எதிர்ப்பு குரல் கூட கொடுக்காத, இவர்களின் போக்கு, மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சுகிசிவம்


பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர். ஒரு கூட்டத்தில் பேச, பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கும் இவர், தமிழ், ஆன்மிகம் குறித்து பேசும்போது, கேட்பவர்களை மெய் சிலிர்க்க வைப்பார். இவரது பேச்சை கேட்க, லட்சம் பேர் காத்திருக்கின்றனர். இருப்பினும் தமிழ், தமிழ் கடவுளை அவமானப்படுத்தியவர் குறித்து, இதுவரை, ஒரு வார்த்தை கூட பேசவில்லை.


நெல்லை கண்ணன்


'தமிழ் கடல்' என, அடைமொழியில் அழைக்கப்படும் இவரின் பேச்சு மிக பிரபலம். இந்து இலக்கியம், புராணம் குறித்து, இவர் பேசியுள்ளார். ஆனால், மக்களின் மந்திரமாக வீடுகளில் ஒலிக்கும் கந்தசஷ்டி கவசம் அவமதிக்கப்பட்டது குறித்து, இவர் இன்னும் வாய் திறக்கவில்லை.


நடிகர் சிவகுமார்


தமிழ் இலக்கியம், தமிழ் புராணம் குறித்து, பல மேடைகளில் பேசுவதையே, கடந்த ஆண்டில் முழு நேர தொழிலாக வைத்திருந்தார். இவரது தமிழ் புலமை, மனப்பாடத்திறன், நடிகருக்கும் மேலாக, இவரது திறனை வெளிப்படுத்தியது. இவரும், கந்த சஷ்டி கவசம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.


நடிகர் ரஜினிகாந்த்ஆரம்பம் முதல், ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவராக உள்ள இவர், அரசியலுக்கு வந்தாலும், 'ஆன்மிக அரசியலை தருவேன்' என, உறுதியளித்தார். ஆனால், தமிழர்களின் முதன்மை கடவுளாக கருதும் முருகனுக்கும், அவரது கந்த சஷ்டி கவசத்துக்கும் ஏற்பட்ட அவமதிப்பு குறித்து, ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

எதற்கெடுத்தாலும் கருத்து கூறும் நடிகர் சூரியா, ஜோதிகா கூட வாய் திறக்கவில்லை.இதே போல், சின்ன சின்ன சம்பவங்களுக்கு கூட கருத்து தெரிவிக்கும், ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தொல்திருமாவளவன், கம்யூ., கட்சி தலைவர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன், போன்றோர், இந்து கடவுளையும், அவர்களது நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தியது குறித்து கண்டனம் கூட தெரிவிக்காததால், 'கருப்பர் கூட்ட' ஆதரவாளர்களாக பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் பிரச்னையின் போது, வீடியோ பதிவு வெளியிட்ட ரேடியோ ஜாக்கிசுசித்ரா, 'மக்கள் கொதிக்கும் எந்த பிரச்னைக்கும் குரல் தருவேன்' என கூறியிருந்தார். ஆனால், போலீசாரின் எச்சரிக்கையை தொடர்ந்து அந்த பதிவை நீக்கி விட்டார். ஆனால், தற்போது, கந்த சஷ்டி கவசம் தொடர்பான பிரச்னையில் எந்த கருத்தையும் கூறாமலும், வீடியோ பதிவு வெளியிடாமலும், மவுனம் சாதிப்பது தான் அவரது நடுநிலையான செயலா என, மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பொதுவாக பல்வேறு மத கடவுள், மத நம்பிக்கை, வழிபாடு, இறைபாடல்கள் போன்றவைகளை விமர்ச்சிப்பதை, அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது என்பதை அனைத்து தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். 'யூ-டியூப்' சேனலை சில வினாடியில் தடை செய்து, அவற்றை பரப்புதல் செய்வோர் மீது,மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுபோன்ற மதம், நம்பிக்கை, இறை வழிபாடு தொடர்பான சர்ச்சையை ஏற்படுத்துவோருக்காக கடுமையான சட்டப்பிரிவுகளை உருவாக்கி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

-நமது நிருபர் குழு-

Advertisement
வாசகர் கருத்து (160)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
25-ஜூலை-202003:18:22 IST Report Abuse
Subbanarasu Divakaran India நாத்திகர்கள். Kollaiஅதிட்டது Podium போதும் நம் திசை. மாற vum
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
22-ஜூலை-202020:25:41 IST Report Abuse
Nagarajan D அவர்கள் அனைவரும் மதமாற்றம் கும்பல் மற்றும் DMK DK போன்ற கபோதிகள்.
Rate this:
Murthy - Bangalore,இந்தியா
24-ஜூலை-202016:00:40 IST Report Abuse
Murthyசைவ மதத்தை இந்து மதமாக மாற்றிய யோக்கியவான்களை என்னவென்று அழைப்பது....
Rate this:
Cancel
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
22-ஜூலை-202019:49:52 IST Report Abuse
Subramaniyam Veeranathan நாம் ஏன் கல் எறியவேண்டும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X