பொது செய்தி

தமிழ்நாடு

'கோவை கோவில்களில் தீ வைத்த குற்றவாளி எந்த அமைப்பையும் சாராதவர்': போலீஸ் கமிஷனர் தகவல்

Updated : ஜூலை 19, 2020 | Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
கோவை: 'கோவையில் ஜூலை 18ம் தேதி, கோவில்களின் முன் டயர்களில் தீவைத்து எரித்து, கோவில் பொருட்களை சேதப்படுத்திய மர்மநபரை கைது செய்துள்ளோம். அவர் எந்த அமைப்பையும் சாராதவர்' என, மாவட்ட போலீஸ் கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார். கோவை டவுன்ஹால், என்.எச்., ரோடு, ஐந்து முக்கு பகுதியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, இக்கோவில் முன் மர்மநபர் ஒருவர்,

கோவை: 'கோவையில் ஜூலை 18ம் தேதி, கோவில்களின் முன் டயர்களில் தீவைத்து எரித்து, கோவில் பொருட்களை சேதப்படுத்திய மர்மநபரை கைது செய்துள்ளோம். அவர் எந்த அமைப்பையும் சாராதவர்' என, மாவட்ட போலீஸ் கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.latest tamil news
கோவை டவுன்ஹால், என்.எச்., ரோடு, ஐந்து முக்கு பகுதியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, இக்கோவில் முன் மர்மநபர் ஒருவர், டயர்களில் தீப்பற்ற வைத்து கோவிலுக்குள் வீசிச் சென்றார். மேலும், கோவிலில் இருந்த பல்புகள் சேதப்படுத்திய அவர், திரிசூலத்தை வளைத்தார். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் இக்காட்சிகள் அனைத்தும் பதிவாகியிருந்தன. காலையில் கோவிலுக்கு வந்த சிலர், இதுகுறித்து உக்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை துவங்கியது.

இதேபோல், கோவை ரயில்வே ஸ்டேஷன் முன் உள்ள விநாயகர் கோவிலிலும், டயர் எரிக்கப்பட்டு வீசப்பட்டிருந்தது. கவுண்டம்பாளையம் அருகே, நல்லாம்பாளையத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவிலிலும் மர்மநபர்கள் டயரை எரித்து, கோவிலினுள் வீசியுள்ளனர். சுவாமிக்கு அணிவிக்கப்படும் ஆடைகளுக்கும், தீ வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாகவும் துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மர்மநபரைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
latest tamil newsஇந்நிலையில், 'கோவை மாநகரில் மூன்று கோவில்கள் அருகில் மர்ம நபர் டயர் மற்றும் உபயோகமற்ற பொருட்களை தீயிட்டு எரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கஜேந்திரன், 48, என்பவரை இன்று கோவை மாநகர காவல் துறையைச் சேர்ந்த சிறப்பு படையினர் பிடித்தனர். இவர் எந்த அமைப்போ கட்சியோ சாராதவர் என்பது குறிப்பிடத்தக்கது' என, கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் சுமித் சரண் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
21-ஜூலை-202013:53:21 IST Report Abuse
Jayvee அப்படின்னு ஸ்டாலின் சொல்ல சொன்னன்னா ? இல்ல சைமன் செபாஸ்டியன் வேலையா ?
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
20-ஜூலை-202016:51:08 IST Report Abuse
Rafi பாவம், காவல்துறைக்கு எங்கிருந்தோ வந்த அழுத்தம் இப்படி சொல்லவைக்கப்பட்டுள்ளார்கள், பிடி பட்டுவிட்டால் இந்து பெயர் உடையவனாக இருந்தால் மனநோயாளி என்று கூட சொல்ல வைக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கைகள் குப்பையில் வீசப்பட்டுள்ள வரலாறுகளை நாடு சந்தித்து கொண்டிருக்கு. தமிழகத்தில் மத கலவரம் உண்டு பண்ண பல வழிமுறைகளை பயங்கரவாத அமைப்புகள் முயற்சித்து கொண்டிருப்பதை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
20-ஜூலை-202009:37:45 IST Report Abuse
Bhaskaran thimuka kitte koolikku velai seithaanaa
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X