பொது செய்தி

தமிழ்நாடு

நவம்பரில் கட்சி அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை : 'நவம்பரில், கட்சி ஆரம்பிப்பார்' என, வெளியான தகவலால், ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் கட்சி ஆரம்பித்து, முதல்வர் நாற்காலியில், ரஜினி அமர்வார் என, ரசிகர்கள் எதிர்பார்த்த நேரத்தில், 'கட்சிக்கு மட்டுமே, நான் தலைமை; ஆட்சிக்கு வேறு ஒருவரை நியமிப்பேன்' என்று கூறி, அதிர்ச்சி கொடுத்தார், ரஜினி.'ஊழலை மக்கள் வெறுத்தால் மட்டுமே, நான் கட்சி

சென்னை : 'நவம்பரில், கட்சி ஆரம்பிப்பார்' என, வெளியான தகவலால், ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கட்சி ஆரம்பித்து, முதல்வர் நாற்காலியில், ரஜினி அமர்வார் என, ரசிகர்கள் எதிர்பார்த்த நேரத்தில், 'கட்சிக்கு மட்டுமே, நான் தலைமை; ஆட்சிக்கு வேறு ஒருவரை நியமிப்பேன்' என்று கூறி, அதிர்ச்சி கொடுத்தார், ரஜினி.'ஊழலை மக்கள் வெறுத்தால் மட்டுமே, நான் கட்சி ஆரம்பிப்பதற்கு, ஒரு காரணம் இருக்கும்' என்றும் கூறி தட்டிக்கழித்தார். இதனால், ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா என்பது, மிகப் பெரிய கேள்விக்குறியானது.

இந்நிலையில், ரஜினியின் நெருங்கிய நண்பரும், முன்னாள் துணை மேயருமான, 'கராத்தே' தியாகராஜன், 'வரும் நவம்பரில், ரஜினி கட்சி ஆரம்பிப்பார்' என, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது, ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன், பரபரப்பாக இருந்த, 'ரஜினி பொலிடிக்கல் என்ட்ரி' என்ற, 'ஹேஸ்டேக்' வலைதள முழக்கம், மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.கொரோனா ஊரடங்கு, ஆகஸ்ட் மாதத்தோடு முடிவுக்கு வரும் என, எதிர்பார்க்கும் வேளையில், தமிழக சட்டசபைக்கான தேர்தல் பணிகளும் துவங்கும் என தெரிகிறது. இவ்வேளையில், ரஜினி ரசிகர்கள் வரிந்து கட்டி, களம் இறங்கியுள்ளனர்.

ரஜினி பேசிய பேச்சுகளை, சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். மேலும், அவரது திரையுலக வாழ்க்கையில் நடந்த, மக்களை கவரும் வகையிலான விஷயங்களையும், 'டுவிட்டரில்' பகிர்ந்து வருகின்றனர். இதன் வாயிலாக, ரஜினி மீது, ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கும் பணியில், ரஜினி மக்கள் மன்றத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
k srinivasan - chennai,இந்தியா
20-ஜூலை-202015:00:19 IST Report Abuse
k srinivasan Shri Rajinikanth has to be careful in choosing party members and leaders. If karate etc join, it will not serve the purpose..again another munnetra kazhagam
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
20-ஜூலை-202010:39:21 IST Report Abuse
நிலா சீ.சீ இந்த பழம் புளிக்கும்
Rate this:
Cancel
Raja Vardhini - Coimbatore,இந்தியா
20-ஜூலை-202008:06:00 IST Report Abuse
Raja Vardhini கடந்த சில மாதங்களாக இந்துமதமும், இந்துக்களும், இந்துகடவுள்களும் மிக மோசமாக, கேவலமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். இந்துக்கள் மிக வேதனையுடனும், கொதிப்பிலும் உள்ளனர். இதன் பின்னணியில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி உள்ளது.இந்த தருணத்தில் ஆன்மீக அரசியல் செய்யும் நடிகர் ரஜினிகாந்த், இதுவரை எந்தவிதமான கண்டனமும் தெரிவிக்கவில்லை. இந்த ஆளை நம்பி எந்த இந்துவாவது ஓட்டு போடுவானா? இந்த நடிகர் தனது புதிய படம் ஏதேனும் ரிலீசாகும் சமயத்தில் எதையாவது உளறி அந்த படம் ஓடுவதற்கு வழி செய்துகொள்வார். இவர் வந்து எம்.ஜி.ஆர். ஆட்சி தருவாராம்... மக்கள் நம்பனுமாம்.. தமிழர்கள் அந்த அளவுக்கு முட்டாளாகி விடவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X