அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஷாக் அடிப்பது மின்சாரமா; கட்டணமா?' ; ஸ்டாலின்

Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
 'ஷாக் அடிப்பது மின்சாரமா; கட்டணமா?' ; ஸ்டாலின்

சென்னை : ''ஷாக் அடிப்பது, மின்சாரமா; மின் கட்டணமா...,'' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

வீடியோ வாயிலாக, அவர் பேசியதாவது:ஒரு பக்கம் கொரோனா தொற்று வாட்டி வருகிறது என்றால், இன்னொரு பக்கம், மக்களை முதல்வர், இ.பி.எஸ்., வாட்டி வதைக்கிறார். கொரோனா தொற்று ஏற்பட்டதை போல, ஒவ்வொரு வீட்டிற்கும் வந்துள்ள மின் கட்டணத்தை பார்த்து, மக்கள் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்துள்ளனர். மின் கட்டணத்தை பார்த்தால், மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல இருக்கிறது. 'ரீடிங்' எடுத்ததிலும், பல்வேறு குளறுபடிகள். இரண்டு மாதத்திற்கு சேர்த்து எடுக்கும் போது, கட்டண, 'ஸ்லாப்' மாறும்; அதனால், கட்டணமும் எகிறும். இது, மின் வாரியத்திற்கு லாபமாக இருக்கலாம்;

மக்களுக்கு எவ்வளவு பெரிய சுமை என்பது, சாதாரண மக்களை கேட்டால் தான் தெரியும். ஷாக் அடிப்பது, மின்சாரமா; மின் கட்டணமா...சாதாரண நேரம் இல்லை இது; கொரோனா காலம். நுகர்வோருக்கு, நியாயமான மின் கட்டணத்தை வழங்குவது, மிக முக்கியம் என, மின்சார சட்டம் சொல்கிறது. அரசு விதித்தது அநியாயமான கட்டணம்.இந்த அரசுக்கு, மக்களை காப்பாற்றும் உண்மையான எண்ணம் இல்லை, அது தான் உண்மை. கொரோனா பரவும் முன், தடுக்கும் முன் யோசனையும் இல்லை; கொரோனா பரவலை தடுக்கும் ஆக்கப்பூர்வமான எண்ணமும் இல்லை.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களைக் காக்கும் இரக்க குணமும் இல்லை. மக்களின் குரலை கோட்டைக்கு சொல்வதற்கு தான், ௨௧ல் கறுப்புக் கொடி தாங்கி, கண்டன முழக்கத்தை எழுப்ப போகிறோம்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.'கோவில்களை சேதப்படுத்துவதா?''டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது: கோவையில், மூன்று கோவில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்துக்குரியது. பேரிடர் காலத்தில், அதிமுக்கிய பிரச்னைகளில் இருந்து, பொது கவனத்தை திசை திருப்பாத வண்ணம், குற்றம் புரிந்தோர், உடனே சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை, முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.

 சென்னை, தி.நகரில், ௫௦ ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், மாநில அடுக்குமாடி அலுவலகம், சில சமூக விரோதிகளால் களங்கப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தீய செயல் கடும் கண்டனத்துக்குரியது களங்கத்தை உண்டாக்கிய காரண கர்த்தாக்கள் யார் என்பதை உடனே கண்டுபிடித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பான இது போன்ற செயல்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். அந்தக் கட்சிக்குக்குத் தானே நடந்திருக்கிறது என, இப்போது அலட்சியப்படுத்தினால், பின், ஆளுங்கட்சி உள்ளிட்ட, எந்த கட்சிக்கும், இது போன்று நடந்து விடக் கூடும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Minku Pinku - coimbatore,இந்தியா
21-ஜூலை-202002:33:29 IST Report Abuse
Minku Pinku DMK ஹிந்துக்களின் மனது
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
20-ஜூலை-202018:37:43 IST Report Abuse
madhavan rajan மின்சாரத்தைத் தொட்டால் மின்சாரம் ஷாக் அடிக்கும். அதிகமாக மின்சாரத்தைப் பயன்படுத்திவிட்டு (more than 500 units) மின்சார பில்லை பார்த்தால் அப்பாவும் ஷாக் அடிக்கும். சுடலைக்கு எதற்கு இந்த சந்தேகம்.
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
20-ஜூலை-202010:35:23 IST Report Abuse
நிலா திமுக ஆட்சி கரன்ட் ஷாக் இல்லாமல் கவிழ்ந்தது அதிமுக ஆட்சி கரன்ட் பில் ஷாக்கில் கவிழப்போகிறது இரண்டு ஆட்சிக்கும் எமன் கரன்ட் தான்
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
20-ஜூலை-202018:41:14 IST Report Abuse
madhavan rajanTN voters only should decide in 2021 whether they want full time power with high power bills (AIADMK) or part time power(during DMK rule most of the day time in rural areas there will be no power and in urban areas atleast (day/night) for ten hours in a day there will be power cut) with less power bills....
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
20-ஜூலை-202019:01:18 IST Report Abuse
madhavan rajanwhen he speaks about these subjects through video why in certain issues he confidentially tells bharathi about condemning certain people instead of talking through video. May be he is afraid to against the culprits....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X