அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஹிந்து மத எதிர்ப்பு பிரசாரம்: திமுக - அதிமுக சூடான விவாதம்

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (70)
Share
Advertisement
DMK, ADMK, Hindu, ஹிந்து மதம், எதிர்ப்பு பிரசாரம், திமுக,அதிமுக, விவாதம்

சென்னை : தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி செயலர் பழனிவேல் தியாகராஜன், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கு எழுதிய கடிதமும், அதற்கு அவர்கள் எழுதிய பதிலும், சமூக வலைதளங்களில் சூடான விவாதத்தை கிளப்பி உள்ளன.

ஹிந்து மதத்திற்கு விரோதமாக, தி.மு.க., செயல்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, ஏராளமானோர் சமூக வலைதளங்களில், தி.மு.க.,விற்கு எதிரான கருத்துக்களை, பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி செயலர் பழனிவேல் தியாகராஜன், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியின், மதுரை மண்டல செயலர் ராஜ்சத்யன், கோவை மண்டல செயலர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு, கடிதம் எழுதினார்.


அடையாளம்


அதில், அவர் கூறிஇருப்பதாவது: என்னை வளர்த்த முன்னோர்கள் அறிவுறுத்தலின்படி, மக்களுக்கு நல்லது செய்வது தான், ஆன்மிகத்தின் முக்கிய அடையாளம். என்றைக்கும் ஆன்மிகத்தை வைத்து, அரசியல் செய்யக் கூடாது என்ற வாழ்க்கை முறையை, நான் பின்பற்றுகிறேன். அ.தி.மு.க., பொறுப்பில் உள்ள ராஜ்சத்யன், லோக்சபா வேட்பாளராக இருக்கும் போது கூட செய்யாத தவறுகளை, இன்று சாக்கடை அட்டைகள் அளவுக்கு இறங்கி செய்ய வேண்டாம் என, அண்ணன் என்ற முறையில், பாசத்துடன் அறிவுறுத்துகிறேன்.

ஒருவேளை இங்கிருந்து சென்ற, ஹிந்து மத விரோதி மற்றும் தமிழின துரோகி, உங்களுக்கு தவறான அறிவுரை கூறும்பட்சத்தில், நீங்கள் காவி வண்ணத்தை பூசிக்கொண்டு, ஹிந்து மதம் மற்றும் தமிழினத்திற்கு துரோகம் செய்யும் செயல்களில், இறங்கி விட வேண்டாம். ஆன்மிகத்தையும், இறைவன் பெயரையும் வைத்து, அரசியல் பிச்சை எடுப்பவர்களை, நான் மனிதர்களாகவே கருதுவதில்லை.

சாக்கடையில் மிதக்கும் நோய்தொற்று ஏற்பட்ட அட்டைகளாக கருதுகிறேன். எந்த ஒரு மதத்தின் பெயரிலும், தீவிரவாதம் செய்பவர்கள் அனைவரும், ஒரே தரம் தான்.இவ்வாறு, அவர் கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து, ராஜ்சத்யன், ராமச்சந்திரன் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதம்: நாங்கள் விமர்சிப்பதும், கேள்வி எழுப்புவதும், தி.மு.க.,வின் தலைமை என்று சொல்பவரின், பாரபட்சமான மதக் கொள்கைகளைத் தான். விருப்பமில்லை'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கை வழியில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முதல், இன்றைய தலைமை வரை, அனைத்து மதங்களையும், சமமாக பாவிக்கிற வரலாறு தான், அ.தி.மு.க., கொள்கை வரலாறு.ஆனால், வைத்துவிட்ட திருநீறை அழித்தவர், உங்கள் கட்சி தலைவர். ஹிந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதும் இல்லை.

அப்படி தவறி சொன்னாலும், போட்டதை உடனே அழித்து விடுகிறார். அவரது தந்தை கருணாநிதியோ, 'ராமர் என்ன இன்ஜினியரா, பாலம் கட்ட' என்று கேட்டார். உங்கள் கட்சி தலைவரின் சகோதரியும், தி.மு.க.,- - எம்.பி.,யுமான கனிமொழி, திருப்பதி கோவில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் குறித்து பேசிய கிண்டல்களையும், கேலிகளையும், எங்கள் வாயால் சொல்லக்கூட விருப்பமில்லை.

இன்று, தமிழ் கடவுளான முருகனை இழிவு பேசி கைதாகி இருக்கிறார், கருப்பர் கூட்டத்தை சேர்ந்த செந்தில்வாசன். அவர் இப்படி, கந்த சஷ்டி கவசத்தை இழிவு செய்ததை, ஏன் இன்னும், உங்கள் தலைவர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை?


அவசியமில்லை :


ஹிந்து மதமோ, கிறிஸ்தவமோ, இஸ்லாமிய மதமோ எதுவாக இருந்தாலும், அனைத்தையும் மதித்து நடப்பது தான், உண்மையான மதச்சார்பின்மை.அதன்படி, நாங்களும், எங்கள் கட்சியும், எல்லா சமயங்களையும் மதித்து, அனைத்து விழாக்களுக்கும், வாழ்த்து சொல்லும் நாகரிகத்துடன் தான் இருக்கிறோம். எனவே, தாங்கள் எங்களுக்கு இவ்வளவு மெனக்கெட்டு அறிவுரை கூற அவசியம் இல்லை.

ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நிற்கும் மேடையில், ஹிந்து மந்திரங்களையும், கடவுளையும் விமர்சித்து பேசிய, உங்கள் தலைவரான ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும், தாங்கள் இப்படிப் பட்ட அறிவுரைகளை அள்ளி வழங்கலாம்.அமைதிப் பூங்காவான தமிழகத்தில், ஓட்டு வங்கிக்காக, மக்கள் இடையே பிரிவினையை உருவாக்குகிற, அவர்களுக்கு அறிவுரை வழங்கி திருத்துவது, உங்கள் கடமையாகும். இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi - chennai,இந்தியா
21-ஜூலை-202008:10:12 IST Report Abuse
ravi திமுக ஹிந்துவிரோத கட்சியில்லை என்றால் தீயமணி ஹிந்துக்களை அசிங்கம் செய்வதை தடுத்தாரா -ஹிந்துக்கோயில் சொத்துக்களை அபகரிப்பதை குறைந்ததா-வைத்த விபூதியை அழித்தது யார்-ஹிந்துக்கடவுள்களை சடங்குகளை அசிங்கமா விமர்சித்தது யார்-ஹிந்துப்பண்டிகையை விடுமுறைநாளென்றது யார்- திமுகதான்
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
20-ஜூலை-202023:53:55 IST Report Abuse
Rajagopal இனிமேல் எந்த அரசியல் கட்சியும் தனது பெயரை ஒரு மதத்தின் பேராலோ, இனத்தின் பேராலோ, சாதியின் பெயராலோ, இல்லை மொழியின் பேராலோ வைத்துக்கொண்டால் அத்தகைய கட்சி அங்கீகாரம் பெறக்கூடாது என்று சட்டம் இயற்றப் பட வேண்டும். காங்கிரஸ் அல்லது பாஜக கட்சிகளின் பெயர்கள் இந்த மாதிரி இல்லை. அதனால் அவை இயங்கலாம். ஒவ்வொரு கட்சியிலும், ஜனநாயக முறைப்படி, தேர்தல்கள் நடத்தப்பட்டு, அதில் தலைவர்களும், செயலாளர்களும் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். யாரும் இரண்டு முறைக்கு மேல் தலைவர் பதவி வகிக்கக்கூடாது என்றும் சட்டம் இயற்ற வேண்டும். ஒரே குடும்பத்திலிருந்து தலைவர்கள் அடுத்தடுத்து வரக்கூடாது. இப்படி செய்தால் பாரம்பரிய தலைமை, மதங்களின் பெயரால் சேர்க்கப்படும் ஓட்டுவங்கி போன்றவை மறையும்.
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
20-ஜூலை-202022:08:05 IST Report Abuse
S.Ganesan ஸ்டாலினுக்கு dimentia என்ற நோய் இருக்கக்கூடும். இந்த நோய் இருப்பவர்களுக்கு மறதி அதிகரிக்கும். இவருக்கும் இந்து மத நம்பிக்கைகளை கிண்டல் செய்து , திருமண மண்டபத்தில் தான் பேசியது , தன் தந்தை பேசியது , தங்கை பேசியது , இவர்களை கட்சி ஸ்தாபகரான அண்ணா பேசியது , இவர்கள் எல்லோரையும் இப்படி கெடுத்த ஈ வே ரா பேசியது, நடந்து கொண்டது போன்றவை மறந்து விட்டது போலும். எதற்கும் மருத்துவம் பார்த்து கொள்வது நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X