பொது செய்தி

தமிழ்நாடு

குறையும் மேட்டூர் அணை நீர் பாசனத்திற்கு நீர் கிடைக்குமா?

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

மேட்டூர் அணை நீர் இருப்பு, தொடர்ந்து குறைந்து வருவதால், குறுவை பாசனத்திற்கு, முழுமையாக நீர் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்குகிறது. குறுவை நெல் சாகுபடிக்காக, ஜூன், 12ல், முதல்வர் இ.பி.எஸ்., அணையை திறந்தார். இந்த நீரை பயன்படுத்தி, 3.50 லட்சம் ஏக்கரில், சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை சாகுபடி பரப்பு, 3 லட்சம் ஏக்கரை நெருங்கியுள்ளது. பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஜூனில் அணையை திறந்தபோது, அதில், 60 டி.எம்.சி.,க்கு மேல் நீர் இருந்தது. தற்போது, நீர் இருப்பு, 32 டி.எம்.சி.,யாக குறைந்துள்ளது.

பாசனத்திற்கு, செப்டம்பர் வரை தண்ணீர் தேவை. அணையின் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. கர்நாடகாவில் இருந்தும், போதிய நீர் திறக்கப்படவில்லை. வினாடிக்கு, ௩,5௮௮ கன அடி அளவிற்கு மட்டுமே நீர்வரத்து உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், குறுவை பாசனம் முழுமைக்கும் தண்ணீர் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், விவசாயிகள், பொதுப்பணி மற்றும் வேளாண் துறை அதிகாரிகள், கவலையில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்திற்கு, ஜூலை, ஆக., மாத ஒதுக்கீட்டிற்கான நீரை வழங்கும்படி, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதன்பிறகும், நீரை திறக்காமல், கர்நாடக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X