அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலில் போட்டியிட மைத்ரேயன் ஆசை

Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மைத்ரேயன், சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:ஜெ., தலைமை ஏற்று, 1999 ஜூலை, 19ல், அ.தி.மு.க.,,வில் சேர்ந்தேன். இன்று, 21 ஆண்டுகள் நிறைவடைந்து, 22ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.எனக்கு, கட்சியிலும், தேர்தல் அரசியலிலும், பெரிய அங்கீகாரம் கொடுத்த, ஜெ., என் மீது அபரிதமாக, பாசமழை பொழிந்தார். கடந்த, 2001 சட்டசபை தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை இழந்தேன். நீண்ட பல ஆண்டுகள், டில்லியில், தேசிய அரசியலில், ஜெ.,வின் குரலாக ஓங்கி ஒலித்து, 2019 ஜூலை, 24ல், டில்லியிலிருந்து ஓய்வு பெற்றேன்.

கடந்த, 2001ல் ஜெ., என்னை அடையாளப்படுத்திய தொகுதி மயிலாப்பூர். என் ஒரே அடையாளம், நான், ஜெ., விசுவாசி.அவர் இல்லாத சூழ்நிலையில், ஒரு திருப்பு முனையான காலகட்டத்தில், 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் மாநில அரசியலில் ஈடுபட ஆசை. வரும், 2021 சட்டசபை தேர்தலில், போட்டியிட விருப்பம்.ஜெ., ஆன்மா நிச்சயம் எனக்கு ஒரு நல்வழியை காட்டும் என, உறுதியாக நம்புகிறேன்; மற்றபடி கடவுள் சித்தம். கட்சியில், 22ம் ஆண்டு, எனக்கு நல்ல ஆண்டாக அமைய, இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு, மைத்ரேயன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-ஜூலை-202009:28:18 IST Report Abuse
Bhaskaran Kattayil pogum varai pathavi aasai vidaathu polum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X