பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி திறப்பு குறித்து முடிவெடுங்க! தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை : 'தமிழகத்தில், பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை' என, மத்திய அரசிடம், தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பெற்றோரிடம் கருத்து கேட்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் இன்னும் துவங்கப்பட வில்லை. மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே, பாடம் படிக்கும் வகையில்,
school reopen, corona crisis, TN Govt, Central Govt, பள்ளி, திறப்பு, தமிழக அரசு, மத்திய அரசு, உத்தரவு

சென்னை : 'தமிழகத்தில், பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை' என, மத்திய அரசிடம், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பெற்றோரிடம் கருத்து கேட்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் இன்னும் துவங்கப்பட வில்லை. மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே, பாடம் படிக்கும் வகையில், 'வீடியோ' பாடங்கள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகள் தரப்பில், 'ஆன்லைனில்' வகுப்புகளை நடத்துகின்றன. இந்நிலையில், ஊரடங்கு விரைவில் முடிவுக்கு வரும் நிலையில், விரைவில் பள்ளிகளை திறந்து, இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த, மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

இதுதொடர்பாக, மத்திய அரசின் சார்பில், மாநில பள்ளி கல்வித் துறை அதிகாரிகளிடம், ஆன்லைன் வாயிலாக ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. அதில், பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து, விவாதிக்கப்பட்டது.அப்போது, ஒவ்வொரு மாநில அரசும், தங்கள் மாநிலத்தில், கொரோனா தொற்று நிலையை பொறுத்து, பள்ளிகளை திறக்கும் தேதியை முடிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக, பெற்றோர் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டு பெற வேண்டுமென, மத்திய மனிதவள அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், பள்ளிகளை திறக்கும் தேதி குறித்து, முதற்கட்ட அறிக்கையை, ஒவ்வொரு மாநில அரசும் தாக்கல் செய்துள்ளன. அந்த அறிக்கையில், ஒவ்வொரு மாநிலமும், பள்ளிகளை மீண்டும் திறக்க உள்ள மாதத்தை அறிவித்துள்ளன. அதில், 'பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை' என, தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.இந்நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து, இந்த வாரத்தில் முடிவு செய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaran vaidyanathan - Coimbatore,இந்தியா
20-ஜூலை-202010:07:51 IST Report Abuse
sankaran vaidyanathan 'இளமையில் கல்' .'கற்க கற்க கசடற கற்க கற்றபின் நிற்க அதற்கு தக' 'குல வித்தை கல்லாமல் பாகம் படும் ' இவைகள் எல்லாம் தற்சமயம் கால போக்கில் அழிந்து வருகின்றன கல்வி இப்பொழுது குருகுல கல்வி திட்டம் போல குருகுல வாசத்திற்கு பதிலாக வீட்டில் இருந்தவாறே கணனி செல் வழியாக இணைய தள கல்வி போதிக்க முனைந்துள்ளார்கள். கல்வியை அரசியல் வாதிகள் விருப்ப வெறுப்பை பொறுத்து கல்வியாளர்கள் வரை யருக்குகிறார்கள் . கணனி படிப்பு ஏழை எளிய மக்களின்சிறுவர் சிறுமியர்களுக்கு கிட்டாவாய்ப்பாக மாறிவருகிறது சனாதனதர்மத்தின் கீழ்கல்வி மறுக்கப்பட்டது போல இப்பொழுது வசதிஉள்ளோர் வசதி அற்றவர்கள் எனபிரித்திடும் முற்காலத்தில் ஆதி சங்கரர் கூட சிரமப்பட்டார் கல்வி கற்க ஆங்கிலேயர்கள் வந்தபிறகு மெக்காலேகல்வி திட்டம் எல்லோருக்கும் கைகொடுத்தது. அரசியல் தலைவர் காமராசர் காலத்தில் கல்வி எல்லோருக்கும் கிடைத்தது வசதி இல்லாதவர் குழந்தைகள் இலவச மதிய உணவோடு கற்க இப்பொழுது இந்த நிலை மாறுகிறதா
Rate this:
20-ஜூலை-202010:32:31 IST Report Abuse
ஆப்புஆ...ஊன்னா காமராசர் காலத்துலேம்பாங்க. காமராசர் காலத்துல கொரோனா வரலை....
Rate this:
sankaran vaidyanathan - Coimbatore,இந்தியா
20-ஜூலை-202017:48:23 IST Report Abuse
sankaran vaidyanathanஅந்த 'ஆ ' 'ஊ ' என்பதை சிறுவர் சிறுமிகள் படிக்க எடுத்த நடவடிக்கை என்ன என்பதை தெளிவு படுத்துங்கள் அதற்கும் தடுப்பு நடவடிக்கை எடுக்க பட்டுள்ளதா...
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
20-ஜூலை-202007:00:03 IST Report Abuse
NicoleThomson அதாவது நீங்களே ஆப்பு வெச்சுக்கோங்க என்று சொல்லுகிறார்கள்
Rate this:
Cancel
20-ஜூலை-202006:49:17 IST Report Abuse
ஆப்பு அவிங்க: சீக்கிரம் பள்ளிகள் திறப்பது பற்றிய முடிவைச் சொல்லுங்க. உங்கள் முடிவை வைத்தே மத்திய அரசு வழிகாட்டும்.ஹ..ஹ.. மோடி டா...இவிங்க: மத்திய அரசின் வழிகாட்டுதல் பேரில்தான் பள்ளிகள் திறப்பது பற்றி முடிவெடுப்போம்.ஹ..ஹ.. தமிழண்டா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X