சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் புகார் ஆணையத்துக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

சென்னை : போலீஸ் புகார் ஆணையம் செயல்பட, தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர், ஏ.பி.சூரியபிரகாசம் என்பவர் தாக்கல் செய்த கூடுதல் மனு:மாநில, மாவட்ட அளவில், போலீஸ் புகார் ஆணையத்தை அமைக்க, அரசுக்கு உத்தரவிடக்கோரி, 2019ல் வழக்கு தொடுத்தேன். சட்டவிரோதமானதுஉச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்தில் போலீஸ் புகார் ஆணையம் அமைத்திருக்க வேண்டும்; ஆனால், அவ்வாறு அமைக்கவில்லை.ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், மாநில போலீஸ் புகார் ஆணையம் அமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், உள்துறை செயலர் தலைமையில், ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது கட்டுப்பாட்டில் இயங்கும் போலீஸ் அதிகாரிகள், உறுப்பினர்களாக உள்ளனர். இது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது.போலீஸ் சீர்திருத்த சட்டப்படி, போலீஸ் காவலில் இருந்தவர் மரணம் அடைந்தால், அவரது உறவினர்கள் தான், ஆணையத்தில் புகார் அளிக்க முடியும். இந்தச் சட்டப் பிரிவு சட்டவிரோதமானது. குற்ற வழக்குகளில், மூன்றாம் நபர் கூட புகார் அளிக்க முடியும்.கெட்ட பெயர்தமிழக அரசு நியமித்துள்ள போலீஸ் புகார் ஆணையம், சுதந்திரமாக செயல்படாது.

போலீஸ் அத்துமீறலை ஒப்புக் கொண்டால், கெட்ட பெயர் வந்து விடும் என்பதால், தங்களுக்கு கீழ் உள்ளவர்களை அவர்கள் தண்டிக்க மாட்டார்கள்.எனவே, உள்துறை செயலர் தலைமையிலான போலீஸ் புகார் ஆணையம் செயல்பட, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X