பொது செய்தி

தமிழ்நாடு

மின் கட்டண சலுகை: பரிசீலிக்கிறது அரசு

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
EB Bill, TNEB, TN Govt, மின் கட்டணம், சலுகை

சென்னை : அதிக மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் சிரமப்படுவோருக்கு, சலுகை வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பாக, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின் கட்டணத்தை நிர்ணயிப்பது, மின்சார ஒழுங்குமுறை ஆணையம். மின் பயன்பாடு கணக்கெடுப்பில், மின் வாரியம் விதிப்படியே நடக்கிறது. கொரோனா ஊரடங்கால், வீடுகளில் மின் பயன்பாடு அதிகரித்ததால் தான், அதிக கட்டணம் வந்துள்ளது. மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தற்போது மின் கட்டணத்தில் சலுகை வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

இதற்காக, 100 யூனிட் பயன்படுத்திய வீடுகள் எத்தனை; 500 யூனிட் வரை எத்தனை பேர்; அதற்கு மேல் உள்ளவர்கள் எத்தனை பேர்; இதுவரை மின் கட்டணம் செலுத்தாதவர்கள் உள்ளிட்ட விபரங்களை தயார் நிலையில் வைக்குமாறு, அரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், மின் கட்டண விவகாரத்தில், அரசின் முடிவு, ஓரிரு தினங்களில் தெரிய வரும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Babu - mannargudi,இந்தியா
20-ஜூலை-202011:10:36 IST Report Abuse
Babu "மின் கட்டண சலுகை: பரிசீலிக்கிறது அரசு" - தமிழக அரசு மக்களுக்கு பிச்சை போட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. மாதா மாதம் வந்து கணக்கு எடுத்தாலே மக்களால் எளிதாக அதை கட்டி விட முடியும்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20-ஜூலை-202007:45:06 IST Report Abuse
Mani . V "மின் கட்டண சலுகை: பரிசீலிக்கிறது அரசு" - நோ, அதெல்லாம் முடியாது. நாங்கள் (அரசியல்வாதிகள், அதிகாரிகள்) ஆடம்பரம் செய்து வீண் விரயம் செய்தது எல்லாவற்றையும் யார் ஈடுகட்டுவதாம்? அதை இளித்தவாய் மக்கள்தான் ஈடு செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X