அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக காங்., சொத்து அபகரிப்பா? பா.ஜ., புகாருக்கு அழகிரி பதிலடி

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
Congress, BJP, KS Alagiri, Murugan, காங்கிரஸ், சொத்து, அபரிப்பு, பாஜ

'தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்கும் முயற்சி நடக்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் கூறிய குற்றச்சாட்டிற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர், அழகிரி பதிலடி கொடுத்துள்ளார்.


அதிர்ச்சி :


தமிழக காங்., அறக்கட்டளைக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கு நெருக்கமான ஒருவருக்கு, சென்னை, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில், வணிக வளாகம் கட்ட, ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக, பா.ஜ., தரப்பில் புகார் எழுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டில்லியில், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் அளித்த பேட்டி: தமிழக காங்., அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை, அபகரிக்கும் முயற்சி நடக்கிறது என, கூறப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. சென்னை, காமராஜர் அரங்கம் அருகேயுள்ள மைதானம், காமராஜரால் உருவாக்கப்பட்டது. அந்த அறக்கட்டளைக்கு சொந்தமான இடம், 15 ஆயிரம் கோடி ரூபாய் முதல், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளது என, கூறப்படுகிறது. அந்த இடத்தை, மும்பையை சேர்ந்த கட்டுமான நிறுனவத்திற்கு கட்டடம் கட்ட, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அறக்கட்டளை விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி உண்மை நிலையை தெரியப்படுத்த வேண்டும். ராஜிவ் காந்தி அறக்கட்டளை வழக்கை விசாரிக்கும் குழு, தமிழக காங்., அறக்கட்டளை சொத்துக்களின் விவகாரத்தையும் விசாரிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


முகாந்திரம் கிடையாது


முருகனுக்கு பதிலடி தரும் வகையில், அழகிரி கூறியுள்ளதாவது:இந்த விவகாரத்தில், டில்லியில் இருக்கிற யாருக்கும், எந்த தொடர்பும் கிடையாது. டில்லியில் இருந்து, யாரும் கட்டுப்படுத்தவும், இயக்கவும் முடியாது. அந்த இடத்தில், எந்த ஒரு கட்டடமும் கட்டுவதற்குரிய முகாந்திரம் கிடையாது.

அங்கு, 3௦௦ பேர் அமரக்கூடிய உள்ளரங்கம் கட்டியுள்ளோம். அதைத்தான், மாட மாளிகை, கோபுரம் என, சொல்கின்றனரோ என்று தெரியவில்லை. இது, ஓர் அற்புதமான கற்பனை. சென்னையில், பா.ஜ., அலுவலகமான, கமலாலயம் அலுவலகம் அமைந்த இடத்தை, முக்தா சீனிவாசனிடமிருந்து எப்படி வாங்கினீர்கள் என, நான் சொல்லட்டுமா; 30 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை, 3 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளீர்கள்.

எல்லா மாவட்டங்களிலும், பா.ஜ., அலுவலகம் கட்டுவதற்கு இடம் வாங்குகிறீர்களே; இதற்கு எங்கே வசூல் செய்தீர்கள்; அதற்கான அத்தாட்சி இருக்கிறதா? இவ்வாறு, அழகிரி கூறி உள்ளார்.

தமிழக காங்., முன்னாள் தலைவரும், த.மா.கா., மூத்த துணை தலைவருமான, ஞானதேசிகன் கூறியதாவது: தமிழக காங்கிரசின் செயற்குழு தான், அறக்கட்டளைக்கு அறங்காவலரை நியமிக்கும். நான், தமிழக காங்., தலைவராக பதவியில் இருந்த வரை, அறங்காவலர் பொறுப்புக்கு, காங்கிரஸ் மேலிட நிர்வாகி மோதிலால் வோராவை அனுமதிக்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.


வோரா நியமனம்!


'தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையின் அறங்காவலர்களாக, மோதிலால் வோரா, சி.ஆர்.கேசவன் ஆகியோர், 2015ல், நியமிக்கப்பட்டுள்ளனர்' என, தமிழக காங்கிரஸ் தலைவர், அழகிரி கூறியுள்ளார்.

'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது:தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையின் அறங்காவலர்களாக, 2015ம் ஆண்டில், மேலிட நிர்வாகி மோதிலால் வோராவையும், சி.ஆர்.கேசவனையும் நியமிக்க, தமிழக காங்கிரஸ் செயற்குழு பரிந்துரைத்துள்ளது. அரசியல் நோக்கம் உள்ள குற்றச்சாட்டுகளை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Kirubakaran - Doha,கத்தார்
20-ஜூலை-202022:19:31 IST Report Abuse
G.Kirubakaran எப்படியோ தமிழக காங்கிரஸ் சார்பில் ஒரு பெரிய சொத்து உள்ளது ,ராகுலுக்கு தெரிந்து விட்டது.அதையும் களவாடி விட்டால் கட்சியை இழுத்து மூட விடலாம்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
20-ஜூலை-202022:10:01 IST Report Abuse
sankaseshan காங்கிரஸ் கிட்டத்தட்டசெத்த்துக்கொண்டிருக்கிறது ஆட்டயப்போட இப்போதே முயற்சி தொடங்கி விட்டது இந்த அழகிரி மதுரை அழகிரியை விட மோசமானவர்
Rate this:
Cancel
N S - Nellai,இந்தியா
20-ஜூலை-202018:05:44 IST Report Abuse
N S "இந்த விவகாரத்தில், டில்லியில் இருக்கிற யாருக்கும், எந்த தொடர்பும் கிடையாது." .... நாங்களே பார்த்து கொள்கிறோம். காசோலைகள் மேலிடத்தில் தான் உள்ளது. நாங்கள் சுத்த (நவீன)காந்தியவாதிகள். இங்கேயே நாங்கள் ஒருவரை ஒருவர் மதிப்பதில்லையே .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X