சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி தலைவர் வெட்டி கொலை

Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

நெல்லிக்குப்பம் : தேர்தல் முன்விரோதம் காரணமாக, ஊராட்சி தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த கீழ் அருங்குணத்தைச் சேர்ந்தவர் சுபாஷ், 30; விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலர். அதே பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன், 45; அ.தி.மு.க., பிரமுகர். இருவரும், கீழ் அருங்குணம் ஊராட்சி தலைவர் பதவிக்கு, தொடர்ந்து போட்டியிட்டனர். இதில், இருவருக்கும் முன்விரோதம் உள்ளது. கடந்த முறை நடந்த தேர்தலில், சுபாஷ் வெற்றி பெற்று, ஊராட்சி தலைவர் ஆனார். கடந்த ஜனவரி மாதம், சுபாஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தாமோதரன் வீட்டுக்கு சென்றனர். தாமோதரன் இல்லாததால், அவரது ஆதரவாளர் தங்கவேலு, 37, என்பவரை வெட்டி கொன்றனர்.

இது தொடர்பாக, நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, சுபாஷ் உட்பட, 15 பேரை கைது செய்தனர். சுபாஷ், ஜாமினில் வந்தார்.இந்நிலையில், நேற்று மாலை, 6:௦௦ மணியளவில், ஊராட்சி தலைவர் சுபாஷ், தன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். இதையறிந்த தாமோதரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், 20 பேர் அங்கு சென்று, சுபாஷை கத்தியால் சரமாரி வெட்டி தப்பிச் சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில், சுபாஷ் இறந்தார் .தாமோதரன் உட்பட, 20 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஒருவரை பிடித்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
20-ஜூலை-202016:24:50 IST Report Abuse
Baskar சபாழ் சரியான போட்டி. அவன் இவனை வெட்டினான் இவன் அவனை வெட்டினான். இடையில் இதில் என்ன பஞ்சாயத்து. என்ன பெட்டிக்கு அலையும் திருமா கொஞ்சம் குதிக்கும் இவனுக்கு உதவியாக வை.கோ. வேல்முருகன் ஸ்டாலின் இன்னும் காசுக்கு அலையும் நபர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கோஷம் எழும். திருமா ஒரு பாட்டு பாடுவான் போனவன் போனாண்டி அவன் திரும்பி வரமாட்டாண்டி என்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X