சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்'கில் ஒரே நாளில் ரூ.182 கோடிக்கு விற்பனை

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

சென்னை : 'டாஸ்மாக்' கடைகளில், நேற்று முன்தினம், 182 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளன.

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், சென்னை உட்பட, கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் தவிர்த்து, மற்ற இடங்களில், தற்போது, 4,400 மது கடைகள் வாயிலாக, மது வகைகளை விற்பனை செய்கிறது. வாரத்தின் அனைத்து நாட்களும், மது கடைகள் செயல்படுகின்றன. வைரஸ் பரவலை தடுக்க, தமிழகம் முழுவதும், இம்மாதத்தின் அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும், தமிழக அரசு, தளர்வில்லாத முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால், மது கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று மது கடைகள் செயல்படவில்லை. இதனால், 'குடி'மகன்கள், சனிக்கிழமை, நீண்ட நேரம் வரிசையில் நின்று, மது வகைகளை வாங்கினர். அன்று மட்டும், 182 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X