சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாரடைப்பில் இறந்தவர் உடலுக்கு மக்கள் எதிர்ப்பு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

வேலுார் : மாரடைப்பால் இறந்தவரின் உடலை, கொரோனா அச்சத்தால், ஊருக்குள் கொண்டு வர மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த சின்ன கீசகுப்பத்தைச் சேர்ந்த பெண், வேண்டாமணி, 51. இவரது மகன் ஜனார்த்தனன், 31; ரயில்வே ஊழியர். கடந்த வாரம், வேண்டாமணி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது மகன் ஜனார்த்தனனுக்கு, மாரடைப்பு ஏற்பட்டு, நேற்று முன்தினம், வேலுார் அரசு மருத்துவமனையில் இறந்தார். 'இவருக்கு கொரோனா இல்லை' என, சான்று அளிக்கப்பட்டது.ஆயினும், கொரோனா அச்சத்தால், சின்ன கீசகுப்பத்தில் உள்ள அவரது வீட்டுக்கு, உடலை கொண்டு வர மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வருவாய்த் துறையினர் பேச்சு நடத்தியும், மக்கள் ஏற்கவில்லை.

இதனால், மருத்துவமனையில் இருந்து, அவரது உடல், நேரடியாக சின்ன கீசகுப்பம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X