சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

டாக்டரை இடம் மாற்ற எம்.பி., எதிர்ப்பு!

Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 டாக்டரை இடம் மாற்ற எம்.பி., எதிர்ப்பு!

நாயர் கடை வழியாக சென்ற, மணிகண்டன் என்பவரிடம், நலம் விசாரித்த பின், பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.

''மாநகராட்சியில காரியம் ஆகணுமுன்னா, 'டிராவல்ஸ்' உரிமையாளரை பார்க்கணுமாம் பா...'' என, முதல் தகவலுக்கு வந்தார், அன்வர் பாய்.

''எதுக்குங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''கோவை மாநகராட்சி உயரதிகாரியும், 'டிராவல்ஸ்' உரிமையாளரும், ஒண்ணா சேர்ந்து, சரக்கு அடிக்கிற அளவுக்கு நண்பர்கள் பா...

''மாநகராட்சியில ஏதும் காரியம் ஆகணுமுன்னா, அந்த உயர் அதிகாரி, 'நீங்க போய், அந்த டிராவல்ஸ்காரரை பாருங்க'ன்னு சொல்லுறாராம்... அங்கே, 'டீல்' பேசி, தொகை கைமாறினதுக்கு அப்புறம் தான், உயரதிகாரி கையெழுத்து போடுறாராம் பா...

''விதி மீறி கட்டுனதால, 'சீல்' வைக்கப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்களிடம், 'டீல்' பேசி, அதை திறந்து விட்டுருக்காங்க... 'பார்ட்டி பண்ட்'ன்னு சொல்லி, வசூல் வேட்டையும், அவரு நடத்துறாராம் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''அந்த டாக்டரு, மதுரையிலேயே இருக்கட்டும் என, எதிர்க்கட்சி, எம்.பி., சொல்லியிருக்காருங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி

''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''மார்க்சிஸ்ட் கட்சி, எம்.பி., வெங்கடேசனின் அம்மாவுக்கும், தங்கச்சிக்கும், கொரோனா பாதிப்பு இருந்துருக்குங்க...

''மதுரை அரசு மருத்துவமனையில, 'அட்மிட்' பண்ணிருந்தாங்க... தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவ மனையில் இருக்கற, தலைமை மருத்துவ அதிகாரி, காந்திமதிநாதன், கொரோனா நோயாளிகளை நல்லா கவனிக்கிறாராமுங்க..

.''சிகிச்சையில, எம்.பி.,யோட அம்மாவும், தங்கச்சியும் நல்லாவே தேறிட்டாங்க... இதனால அங்கே, நல்ல சிகிச்சை தாராங்கன்னு, எம்.பி., பாராட்டி அறிக்கை விட்டிருக்காருங்க...

''இந்நிலையில், அந்த டாக்டரை, சென்னைக்கு மாத்துறதுக்கு, சுகாதார துறை முடிவு பண்ணியிருக்கு... அந்த டாக்டரு மதுரையிலேயே இருக்கட்டும்... டிரான்ஸ்பர் பண்ணாதீங்கன்னு, எம்.பி., கேட்டுகிட்டதால, அவரை இடம் மாத்தலையாமுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''பேக்கேஜ் டெண்டருக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கு ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், குப்பண்ணா .

''எந்த துறை விவகாரம் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''லட்ச ரூபாய்களில் இருக்கும், சிறிய பணிகளை ஒண்ணாக்கி, கோடி ரூபாயில், 'பேக்கேஜ் டெண்டர்' விடுறது, பொதுப்பணித் துறையில அதிகரிச்சது...

''இதுக்கு, சிறிய ஒப்பந்ததாரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிச்சதால, பேக்கேஜ் டெண்டரை குறைச்சிட்டா... இப்ப, பேக்கேஜ் டெண்டர் கலாசாரம் தலைதுாக்க ஆரம்பிச்சிடுத்து ஓய்...

''சென்னை உட்பட, நாலு மாவட்டங்கள்ல, மழை தடுப்பு பணியை செய்யறதுக்கு, 10 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியிருக்கு... இதுல, 60க்கும் மேற்பட்ட பணிகள் வர்றது... இதை, ஒன்பது பேக்கேஜ் பணியா மாத்தி, டெண்டர் விட ஏற்பாடு நடக்கறது ஓய்...

''கொரோனா நேரத்தை சாதகமா பயன்படுத்தி, தங்களுக்கு வேண்டியவாளுக்கு பணியை கொடுக்க, அதிகாரிகள் முடிவு பண்ணிட்டா... ''விஷயத்தை கேள்விப்பட்ட ஒப்பந்ததாரர்கள் கொந்தளிச்சி போயிருக்கா... கூடியே சீக்கிரமே, பிரச்னை பெரிய அளவில் வெடிக்க போறது ஓய்...'' எனக்கூறி முடித்தார், குப்பண்ணா.

நண்பர்கள் கிளம்பினர்; பெஞ்ச் அமைதியானது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
20-ஜூலை-202018:17:20 IST Report Abuse
Anantharaman Srinivasan மணிகண்டன் யாரு ? அதிகாரியா இல்லை ட்ராவல்ஸ் உரிமையாளரா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X