சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்று ஆடி அமாவாசை திதி கொடுக்க தடை

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

நாமக்கல் : ஆடி அமாவாசையை முன்னிட்டு, இன்று காவிரி ஆற்றங்கரையில், பொதுமக்கள் திதி கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் கலெக்டர் மெகராஜ் அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், காவிரி ஆற்றின் கரையோரமான குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனுார் உள்ளிட்ட பகுதிகளில், கோவில்கள் மற்றும் புண்ணிய தலங்கள் உள்ளன. இப்பகுதிகளில், ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தன்று, பக்தர்கள் தங்கள் முன்னோர், மறைந்த உறவினர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்வது வழக்கம்.தற்போது, கொரோனா காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ளது. ஒரே இடத்தில், அதிகளவில் மக்கள் கூடுவதால், தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. இதனால், மக்கள் நலன் கருதி, இன்று ஆடி அமாவாசை நாளில், பொதுமக்கள், காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

தடையை மீறி, யாரேனும் வந்தால் அவர்கள் மீதும், வாகனங்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.இதேபோல, காவிரி பாயும் இதர மாவட்டங்களிலும், தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X