பொது செய்தி

தமிழ்நாடு

புத்தகங்கள் வர்த்தகம்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

மதுரை : கொரோனா ஊரடங்கால், தமிழக அளவில், ௧௫ கோடி ரூபாய் புத்தக விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக, தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இந்தாண்டு ஜனவரியில், சென்னை புத்தக கண்காட்சியில், 16 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்றன. 10 லட்சம் வாசகர்கள் பார்வையிட்டு, புத்தகங்களை வாங்கினர். நெல்லையில் நடந்த கண்காட்சியிலும், பல கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்றன.கொரோனா தாக்கம் நீடிப்பதால், அடுத்து நெய்வேலி, கோவை, ஈரோடு, மதுரையில் கண்காட்சி நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது.தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்க தலைவர், சண்முகம் கூறியதாவது: ஆண்டுதோறும் செப்டம்பரில், மதுரை கண்காட்சியில், பல கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை ஆகும்.

வழக்கமாக, கண்காட்சி நடத்தப்படும் தமுக்கம் மைதானத்தில், இம்முறை கட்டுமான பணி நடப்பது மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளால் நடப்பது சந்தேகம்.ஊரடங்கால், பதிப்பாளர் கள் சொந்த ஊர் சென்ற நிலையில், புத்தக கடைகள் திறந்திருந்தாலும், வாழ்வாதார பிரச்னையில் தவிக்கும் மக்கள், புத்தகம் வாங்குவது சாத்தியமில்லை. இதனால், நான்கு மாதங்களில் கண்காட்சி தவிர, வழக்கமான புத்தக வர்த்தகம், 15 கோடி ரூபாய் பாதிக்கப்பட்டுள்ளது.மாவட்ட நுாலகங்களுக்கு புத்தகங்கள் அனுப்பி விட்டோம். ஆனால், இதுவரை, 50 சதவீதம் பணம் தான் வந்துள்ளது. தொழில் முடங்கியுள்ள வேளையில், மீதமுள்ள, 50 சதவீத பணத்தை அரசு வழங்கினால் பொருளாதார பிரச்னை தீரும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X