பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

கிணத்துக்கடவு, நெகமம் பகுதிகளில் உள்ள ஓட்டல்களில், உணவு பொருட்களை வாழை இலையில் பார்சல் செய்து கொடுக்கும் பழக்கம் குறைந்துவிட்டது.கொரோனா பரவலை தடுக்க, ஓட்டல்களில் பார்சல் வழங்கும் நடைமுறை மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது. தற்போது, பிளாஸ்டிக் பேப்பர்களில் தோசை, இட்லி என பல்வேறு உணவுகளை பார்சல் செய்து கொடுக்கின்றனர். மேலும், சட்னி, சாம்பார் போன்றவை சூடாக பிளாஸ்டிக் கவரில் கட்டிக் கொடுக்கின்றனர்.இதனால், பிளாஸ்டிக் பேப்பர் மற்றும் பைகளில் உள்ள நச்சுப்பொருட்கள் உணவில் கலந்துவிடுகிறது. இதனை கட்டுப்படுத்த உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து உணவு பொருட்களையும் வாழை இலையில் பார்சல் செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.முகக்கவசம் அணிய அறிவுரைவால்பாறையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமணன் தலைமையிலான டாக்டர் குழுவினர் எஸ்டேட் பகுதியில், நோய் தடுப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த நான்கு மாதங்களாக, கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. முகக்கவசம் அணிவதே பாதுகாப்பானது. ஆனால், சிலர் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர்.வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாமலும், மூக்கு, வாயையை மூடாமல், முகக்கவத்தை கழுத்துக்கு கீழே அணிந்து செல்வதால், வைரஸ் தாக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, மூக்கு, வாயை மூடும் வகையில், முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கவேண்டும்,' என்றனர்.மலைவாழ் மக்களுக்கு உதவிஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், மலைவாழ் பகுதி மக்களுக்கு உதவிப்பொருட்கள் வினியோகிக்கப்பட்டது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உடுமலை கிளை, சென்னை, யோகா வித்யா பிராணிக் ஹீலிங் பவுண்டேஷன் ஆப் தமிழ்நாடு அமைப்பு ஆகியவை சார்பில், உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள மாவடப்பு, காட்டுபட்டி, குழிப்பட்டி, குறுமலை, மலைவாழ் பகுதி மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டன. அப்பகுதிகளிலுள்ள, 400 குடும்பங்களுக்கு, மொத்தமாக, 1.6 லட்சம் ரூபாய் மதிப்பில் மளிகைப்பொருட்கள், முகக் கவசம் வழங்கப்பட்டது.பொதுமக்களுக்கு, கபசுர குடிநீர் இலவசமாக வழங்கினர். உடுமலை மற்றும் தாராபுரம் கல்வி மாவட்ட அலுவலர்கள் பழனிச்சாமி, சிவக்குமார், கல்வி மாவட்ட துணை ஆய்வாளர் கலைமணி முகாமில் பங்கேற்று உதவிப்பொருட்கள் வழங்கினர்.கொரோனா விழிப்புணர்வுவால்பாறை அடுத்துள்ள அட்டகட்டி மின்வாரிய மனமகிழ் மன்றத்தில், கொரோனா குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, காடம்பாறை மின் உற்பத்தி பொறியாளர் ராபிக் தலைமை வகித்தார். செயற்பொறியாளர்கள் சக்திவேல், முருகானந்தம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி செயற்பொறியாளர் ஹெர்பெட் வரவேற்றார்.டாக்டர்கள் பேசும் போது, 'கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக, நாள் ஒன்றுக்கு, 20 முறையாவது சோப் போட்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும். 'வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது கட்டாயம் 'மாஸ்க்' அணிய வேண்டும். தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பணிபுரியும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்,' என்றனர்.நிகழ்ச்சியில், யோகா குறித்து பயிற்சியாளர் விளக்கி பேசினார். அட்டகட்டி, காடம்பாறை, நவமலை உள்ளிட்ட மின் உற்பத்தி நிலையங்களை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.கோர்ட்டில் கொரோனா விழிப்புணர்வுபொள்ளாச்சி நீதிமன்ற ஊழியர்களுக்கான கொரோனா விழிப்புணர்வு முகாம் நடந்தது. கோர்ட் வளாகத்தில் நடந்த முகாமுக்கு, சார்பு நீதிபதி ராஜா தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி சுபாஷினி, மாஜிஸ்திரேட்கள் தங்கமணிகணேஷ், செல்லையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அதிகாரி ராஜ்குமார், டாக்டர் மாணிக்கவேல்ராஜன், நகராட்சி சித்த மருந்தாளுனர் காமராஜ் ஆகியோர் பங்கேற்று, கொரோனா தொற்று நோய் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விளக்கினர். தவிர, சித்த மருத்துவத்தால் நோய் வராமல் தடுக்கவும், நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் முறை குறித்தும் கோர்ட் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோர்ட் ஊழியர்களுக்கு, கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.விநாயகர் சதுர்த்தி ஆலோசனைவால்பாறை தாலுகா இந்துமுன்னணி நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசந்தர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், வரும், ஆக. 22ம் தேதி, 108 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது என்றும்,ஊரடங்கு அமலில் இருக்கும் பட்சத்தில், ஊரடங்கு சட்டத்திற்கு உட்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து எளிய முறையில் விழாவை கொண்டாடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.தாலுகா பொறுப்பாளர்கள் ஜெயன், ரவீந்திரகுமார், சதீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதைக் கண்டித்து, பொள்ளாச்சி வட கிழக்கு ஒன்றிய பா.ஜ.,வினர் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.முருகக்கடவுளை வழிபட பக்தர்கள் கந்தசஷ்டி கவசம் பாடி, பரவசமடைகின்றனர். இதனை இழிவுபடுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொள்ளாச்சி வட கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், போராட்டம் நடந்தது. ஒன்றியத்தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். அதே போல், நிர்வாகிகள் வீடுகள் முன், முருகக்கடவுள் படத்துடன், கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களை கண்டித்து குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம், 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடந்தது.கண்டன ஆர்ப்பாட்டம்பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, வால்பாறையில் டூரீஸ்ட் கார் ஓட்டுனர், உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.வால்பாறை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் சந்தோஷ் தலைமை வகித்தார். செயலாளர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், சுற்றுலா கார் ஓட்டுனர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரண நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X