சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'கூட்டத்துல கட்டுச் சோத்தை அவுக்காதீங்க!'

Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'கூட்டத்துல கட்டுச் சோத்தை அவுக்காதீங்க!'

சென்னை, திருவேற்காடு கோலடி ஏரியில், இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் நடக்கும், மேம்பாட்டு பணிகளை, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர், பாண்டியராஜன், சமீபத்தில் ஆய்வு செய்தார்.அப்போது, ஆவடி மற்றும் திருவேற்காடு பகுதிகளை சேர்ந்த, அ.தி.மு.க.,வினர், அவருடன் இருந்தனர். அதில், ஆவடி, அ.தி.மு.க., நகர செயலர் தீனதயாளன், தன் ஆதரவாளர்களிடம், 'நம்ம பசங்க, இந்த ஏரியில் தானே, கொட்டகை போட்டாங்க' என்றார். அதற்கு, அருகில் இருந்தவர், 'அது, இந்த ஏரி இல்லை... எம்.ஜி.ஆர்., நகர் ஏரி. இப்போ, 'பில்டிங்' கட்டிட்டாங்க...' என்றார்.

அவர்களுடன் இருந்த, மற்றொரு நிர்வாகி, 'நிருபர், பொதுமக்கள் எல்லாரும் இருக்கும்போது, இதெல்லாம் பேசலாமா... கூட்டத்துல கட்டுச் சோத்தை அவுக்காதீங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் அமைதியாகினர்!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-ஜூலை-202006:07:47 IST Report Abuse
D.Ambujavalli கட்டுச்சோறு இவர்கள் அவிழ்த்து தான் மக்களுக்குத் தெரிய வேண்டுமா? எத்தனை ஏரி , குளங்கள் ஆக்கிரமிப்பானதென்று மக்கள் விரல்நுனியில் கணக்கு வைத்திருப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X