சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை கோவில்களுக்கு தீ சேலம் ஆசாமி கைது

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

கோவை : கோவையில், கோவில்கள் முன் டயர்களில் தீ வைத்து எரித்து, பொருட்களை சேதப்படுத்திய நபரை, போலீசார் கைது செய்தனர்.

கோவை, என்.எச்., ரோடு, ஐந்துமுக்கு மாகாளியம்மன் கோவில்; கோட்டைமேடு விநாயகர் கோவில்; கோவை ரயில்வே ஸ்டேஷன் முன் உள்ள, மாப்பிள்ளை விநாயகர் கோவில். நல்லாம்பாளையம் செல்வ விநாயகர் ஆகிய கோவில்கள் முன், நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர், டயர்களில் தீப்பற்ற வைத்து, கோவில்களுக்குள் வீசிச் சென்றார்.கோவில் பல்புகள், திரிசூலம் சேதமாகின. கண்காணிப்பு கேமராவில் இக்காட்சிகள் பதிவாகியிருந்தன. உக்கடம், ரேஸ்கோர்ஸ், துடியலுார் போலீசார் விசாரித்தனர்.மர்ம நபர், சேலம் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்த கஜேந்திரன், 48, என தெரிந்தது. அவரை பிடிக்க, ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சேலத்தில், நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

போலீசார் கூறுகையில், 'சில நாட்களுக்கு முன், குடும்பத்தினருடன் சண்டையிட்டு தலையணையை எரித்து சென்ற, கஜேந்திரன் வீடு திரும்பவில்லை. அவர் மொபைல் போன் பயன்படுத்துவதில்லை. 'மொபட் பதிவு எண் வாயிலாக அடையாளம் காணப்பட்டார். கோவில்கள் முன் டயரை எரித்த காரணம் குறித்து, விசாரிக்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X