கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'14 ஆண்டுக்கு பின் கருணை பணி நிராகரிப்பு சரியே'

Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

மதுரை : 'கருணைப் பணி நியமனத்திற்கு, 14 ஆண்டுகள் தாமதமாக விண்ணப்பித்தது ஏற்புடையதல்ல. பணி வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் பேபி. இவரது கணவர், மதுரை தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், வாட்ச்மேனாக பணிபுரிந்து, 1991ல் இறந்தார். இவரது மூன்றாவது மகன் பாலாஜி, 2005ல் பிளஸ் 2 முடித்தார்.அவருக்கு கருணைப் பணி கோரி, 2005ல் அரசுக்கு விண்ணப்பித்தனர். நீண்ட தாமதத்திற்கு பின் விண்ணப்பித்ததாக கூறி, நிராகரிக்கப்பட்டது. மகனுக்கு பணி வழங்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றக் கிளையில், பேபி மனு செய்தார். தனி நீதிபதி, பணி வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து, மதுரை கலெக்டர், நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதிகள், எம்.சத்திய நாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்தது.பேபி தரப்பில், 'குறைந்த கல்வியறிவு, ஏழ்மை நிலையால், குறித்த காலத்திற்குள் விண்ணப்பிக்க இயலவில்லை. 'இரண்டு மகன்கள், ௮ம் வகுப்பு முடித்திருந்ததால், தகுந்த பணி கிடைக்க வாய்ப்பில்லை. மூன்றாவது மகன், பிளஸ் 2 முடித்தபின் விண்ணப்பித்தோம்' என, தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பில், 'பேபிக்கு கருணைப் பணி வழங்க முன்வந்தும், அவர் ஏற்கவில்லை. மூன்றாவது மகன், 2005ல், பிளஸ் 2 முடிக்கும் வரை காத்திருந்து, 14 ஆண்டுகளுக்கு பின், பணி கோரி விண்ணப்பித்து உள்ளனர்.

'அரசுப் பணியில் ஒருவர் இறந்தால், மூன்று ஆண்டுகளுக்குள், கருணை பணி கோரி விண்ணப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள், 'நீண்ட தாமதத்திற்கு பின் விண்ணப்பித்ததால், அரசு நிராகரித்துள்ளது. சட்டத்தின் நிலைப்பாட்டின்படி அரசின் மேல்முறையீடு ஏற்கப்படுகிறது. தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூலை-202008:19:47 IST Report Abuse
Mohan Baskaran அரசு ஊழியர் இறக்கும் போது அவர் குடும்பத்தில் சரியான படிப்புள்ள தகுதியான ஆண் வாரிசு இல்லை எனவே 2005 கருணை அடிப்படையில் தன் மகனுக்கு வேலை கோரியுள்ளார் மனுதாரார் தனி நீதிபதி கருணை காட்டி பணி வழங்க உத்தரவு இட்டுள்ளார் அதை ஏற்க்க மறுத்த துறை மேல் முறையிடு செய்துள்ளது இறந்தவர் குடும்பம், தலைவர் பணிக்காலத்தில் இறந்து இருக்கிறார் ஏற்கனவே அவர்கள் குடும்பம் துயரத்திலும் வறுமையிலும் வாடிவருகின்றனர் வேலை கோரியிருப்பது தாமதம் தான் அதற்கான காரணத்தையும் குறிபட்டு இருக்கிறார் மனுதாராருக்கு கருணை அடைப்படையில் விதிமுறைகள் சற்று தளர்த்தி பாதிக்கப்பட்ட வறுமையில் வாடும் அந்த குடும்பத்திற்கு வேலை வழங்க உத்தரவு பிறப்பித்து இருக்கலாம் அந்த வறுமையில் வாடும் குடும்பத்திற் வேலை கொடுப்பதால் தமிழ் நாடு அரசு எந்த விதத்திலும் நிதிநிலையில் பாதிக்கப்போவது இல்லை சட்டப்படி மூன்று வருடத்தில் பணிக்கு சேரவேண்டும் என்பது தமிழ் நாடு அரசு அரசு ஊழியர்கள் சட்ட விதி மட்டுமே இது ஒன்றும் நீதிபதிகளால் தளர்த்த இயலாது இந்திய அரசியல் சட்டம் அமைப்பு சட்டம் கிடையாது, எனவே சற்றும் கருணை காட்ட இயலாது என்று காரணம் கூறுவதற்கு இது ஏன் இந்த நீதிபதி களுக்கு தெரியவில்லை ? எனக்கு கருத்து கூற கருத்து சுதந்திரம் உண்டு எனவே இந்த நீதிபதிகளின் இந்த தீர்ப்பு சற்றும் கருணையில்லாத தீர்ப்பு தீர்ப்பு சரியிலை என்பதே எனது கருத்து
Rate this:
hari - ,
20-ஜூலை-202019:48:48 IST Report Abuse
hariநீங்கள் கூறும் கருத்தும் ஏற்கும் படி உள்ளது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X