சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீரில் மூழ்கி சிறுவன், சிறுமி பரிதாப பலி

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

பண்ருட்டி : செங்கல் சூளை பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி சிறுவன், சிறுமி உயிரிழந்தனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு, புது காலனியைச் சேர்ந்தவர் சிவகுமார்; விவசாயி. இவரது மகன் ஆதித்யா, ௧௧. சிவகுமாரின் தங்கை மகள் பாரதி, 6.மாடு மேய்க்க சென்ற உறவினருக்கு, நேற்று மதியம் ஆதித்யா, பாரதி சாப்பாடு எடுத்துச் சென்றனர். அப்பகுதியில் உள்ள செங்கல் சூளை அருகே விளையாடிக் கொண்டுஇருந்தனர்.அப்போது, சூளைக்காக மண் எடுத்த பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் ஆதித்யா, பாரதி இருவரும் தவறி விழுந்து உள்ளனர். அங்கிருந்தவர்கள் உதவியுடன், தண்ணீரில் இறங்கி தேடியபோது, இருவரும் சடலமாக மிதந்தனர். பண்ருட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X