பொது செய்தி

தமிழ்நாடு

பு.முட்லுார் எம்.ஜி.ஆர்., சிலைக்குஎம்.எல்.ஏ., மாலை அணிவிப்பு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அருகே எம்.ஜி.ஆர்., சிலைக்கு, கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்தார்.பரங்கிப்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க., இரண்டாக பிரிக்கப்பட்டு, மேற்கு ஒன்றிய செயலராக ராசாங்கம், கிழக்கு ஒன்றிய செயலராக அசோகன் புதிய நிர்வாகிகளாக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நியமனம் செய்தனர். அதையொட்டி, பு.முட்லுாரில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேற்கு ஒன்றிய செயலர் ராசாங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட சேர்மன் திருமாறன், கிழக்கு ஒன்றிய செயலர் அசோகன், சேர்மன் கருணாநிதி முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆர்., சிலைக்கு, கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட மீனவரணி செயலர் வீராசாமி, நகர செயலர் மாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் ரவி, பாஸ்கர், மீனவரணி சிவக்குமார், நாகராஜ், ஜெ., பேரவை சந்தர் ராமஜெயம், கல்யாணசுந்தரம், கிள்ளை தமிழரசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் சிவ சிங்காரவேலு, செல்வரங்கம், முன்னாள் ஒன்றிய செயலர் இளங்கோவன், ஒன்றிய இளைஞரணி செயலர் வேல்முருகன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் தன கோவிந்தராஜன், ஹாஜா நஜிமுதீன், கணேஷ், ஆறுமுகம், வசந்த், ஓய்வுப்பெற்ற பேராசிரியர் ரங்கசாமி, புவனகிரி ஒன்றிய இளைஞரணி செயலர் செழியன், மகளிரணி செயலர் ரங்கம்மாள், பாவாடை, கோதண்டம், சவுந்தரராஜன், ரயில்வே பாஸ்கர், மாரிமுத்து, முருகன், வீரப்பாண்டியன், சுதந்திரதாஸ், ஞானதேசிங்கு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X